சூர்யாவின் ’24’ திரைப்படம் அமெரிக்காவில் பிரிமியர் காட்சியில் மட்டுமே 15 லட்சம் வசூல் செய்தது. ஆனால் இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் அமெரிக்க பிரிமியர் காட்சியில் ரூ.30 லட்சம் வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

மேலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளதால் இன்றைய முதல் நாள் ஓப்பனிங் வசூல் சூர்யா படங்களில் மிகப்பெரிய சாதனை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது

மேலும் இன்று வெளியாகியுள்ள குலேபகாவலி மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களுக்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளதால் இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாகவும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ கருதப்படுகிறது.