சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இதுவரை ஏற்படவில்லை. ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஏற்படும் கொண்டாட்டம் சூர்யா ரசிகர்களிடம் இல்லாதது ஏமாற்றமாகவே உள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பாஜகவில் உள்ள தமிழக தலைவர்கள் உதவி செய்ததை போல தற்போது சூர்யாவின் படத்தை அதிமுக புரமோஷன் செய்கிறது.

ஆம், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொடக்கு’ பாடலை தடை செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகி ஒருவர் சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்துள்ளர். இந்த புகார் காரணமாக இந்த படத்திற்கு நல்ல புரமோஷன் கிடைத்து வருகிறது.