சூர்யாவுக்கு ஆப்பு வைத்தாரா விஷால்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று பெங்களூரில் நடந்த கன்னட படவிழா ஒன்றில் காவிரி பிரச்சனை குறித்து வீரமாக பேசினார். இந்த பேச்சு மேடையில் இருந்தவர்களையே அதிர வைத்தது.

இந்த நிலையில் விஷாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மைசூரில் நடைபெறவிருந்த சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பின்போது கன்னடர்கள் சிலர் கலாட்டா செய்தனர்.

இதனால் வேறு வழியின்றி படக்குழுவினர் பேக்கப் செய்து சென்னை திரும்பிவிட்டனர். விஷால் வீரமாக பேசிவிட்டு வந்ததன் விளைவு தற்போது அந்த பேச்சு சூர்யாவின் படத்திற்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைந்துவிட்டது.