ஜெமினி கணேசனாக நடிக்கிறாரா சூர்யா?

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்படும் திரைப்படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

1950-70ம் ஆண்டுகளில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகர் சாவித்ரி. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேஷன் உள்ளிட்டோரோடு இவர் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின் ஜெமினி கணேசனை திருமணம் செய்து கொண்டு இவர் சினிமாவிலிருந்து விலகி விட்டார்.

இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகை சமந்தாவும் நடிக்கிறார்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடியாக, அதாவது ஜெமினி கணேசன் கதாபத்திரத்தில் நடிகை சூர்யா நடிக்க உள்ளதாக, கடந்த வாரம் செய்தி வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த படப்பிடிப்பு, சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தற்போது அவர் தனா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருவதால், அவரால் தேதி ஒதுக்க முடியவில்லை. எனவே, இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என கூறியுள்ளனர்.

மகாநதி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற ஆலோசனையில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.