நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு

அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா , உதயசந்திரன் ஐஏஎஸ் , ராஜகோபாலன் , சா. மாடசாமி , பத்ரிகையாளர் சமஸ் , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சூர்யா பேசியபோது, கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம்.2006 ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று செய்து வருகிறது. முதல் தலைமுறை மாணவர்கள்,தன் தாய்,தந்தை படிப்பறிவு இல்லாமல்,படிக்க தேவையான புத்தகம்,பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும்

குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த அகரம். எல்லா தகுதியும்,திறமையும் இருந்தும் வசதி மட்டும் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா?. பன்னிரண்டு வருடம் படித்த மாணவன் வருமையின் காரணமாக கூலி வேலைக்கே செல்ல வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலே அகரம்.2006ல் பேட்சில் இருந்த அகரம் 2010ல் விதையானது.அகரத்தில் தன்னார்வர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.குழந்தைகளின் திறனை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துவதுதான் இந்த அகரத்தின் வேலை.பெற்றோர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பல அரசு பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.அதை பற்றி வெளியில் பேசினால் மட்டுமே குறைகள் தீர்க்கப்படும்.இப்போது மாற்றத்தை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும்.இலவச கல்வி என்று இருப்பதனால் சில மாணவர்களால் படிக்க முடிந்தது.மதியஉணவு என்ற திட்டத்தின் மூலம் உணவுக்காகவாது கல்வி கற்றார்கள்.இப்போது காணப்படும் கல்வியானது நடைமுறைக்கு சாதகம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.உலகத்தை கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. மாணவர்களுக்காக கல்வி துறையில் இருப்பவர்கள் நல்லதே செய்ய வேண்டும்.கல்வி தரம் உயர வேண்டும்.மதிப்பெண்கலுக்காக மட்டுமே படிக்கும் நிலை மாற வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நூலகம் இல்லாத ஊரில் கூட டாஸ்மாக் கடை உள்ளது. இந்த புத்தகம் இரண்டாயிரம் மாணவர்களின் வாழ்கையை மாற்றிய தன்னார்வலர்களின் சாட்சியாக அமைந்துள்ளது என்றார் சூர்யா.