என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டே போவது நடிகை சூர்யாவுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.

சூர்யாவின் தம்பி கார்த்திக்கை வைத்து எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படம் பிளாப் ஆனாலும், அதை பற்றி யோசிக்காமல் செல்வராகவனுக்கு சூர்யா கால்ஷீட் கொடுத்தார். என்.ஜி.கே படமும் துவங்கப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடம் முடிந்து விட்டது. ஆனாலும், படப்பிடிப்பு முடியவில்லை. என்.ஜி.கே. படத்தில் சூர்யா நடித்திராவிடில் இதுவரை அவரின் 3 படங்கள் வெளிவந்திருக்கும்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

படத்தை இன்னமும் முடிக்காமல் செல்வராகவன் இழுத்துக்கொண்டு போவதால் சூர்யா செம கடுப்பில் இருக்கிறாராம். இதையடுத்து, இன்னும் என்னென்ன காட்சிகள் எடுக்கப்போகிறீர்கள் என்கிற லிஸ்டை என்னிடம் கொடுங்கள். அதை பார்த்துவிட்டு எனக்கு திருப்தி என்றால் படப்பிடிப்பை தொடரலாம். இல்லையேல் இந்த படத்தை டிராப் செய்து விடலாம் என சூர்யா கூறியதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

இதையும் படிங்க பாஸ்-  ஜாக் படத்தின் பர்ஸ்ட் லுக் வாழ்த்திய இயக்குனர் பாண்டிராஜ்

அதன் பின்னரும் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்தாராம் சூர்யா. ஆனாலும், படம் முடிந்தபாடில்லை. தற்போது மீண்டும் 10 நாட்கள் கொடுங்கள் என செல்வராகவன் கேட்க இப்படி சிக்கிக் கொண்டேமே என சூர்யா முழிக்கிறாராம்.

பாத்து சீக்கிரம் முடிச்சு விடுங்க செல்வராகவன்….