கார்த்திக் நடித்துவரும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஷுட்டிங் தளத்திற்கு விசிட் செய்துள்ளார் நடிகரும் அண்ணனுமான சூா்யா.

கிராமத்து கதையில் விவசாயத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் கார்த்திக்கு ஜோடியாக சயீஷா, பிரியா பவானி சங்கா், அா்த்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனா். இதை இயக்குநா் பாண்டிராஜ் இயக்குகிறார். தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் ஹிட்டை தொடா்ந்து கார்த்திக் பாண்டிராஜூடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த படமானது தெலுங்கிலும் தயாரிக்கிறது. தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரிலும், தமிழில் கடைக்குட்டி சிங்கம் என்ற பெயரிலும் தயாராக இருக்கிறது.

கார்த்திக் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதை சூா்யாவின் 2டி எண்டா்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ரேக்ளா ரேஸ் சம்பந்தமான காட்சிகளை கடந்த மூன்று நாட்களாக படமாக்கப் பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு நடிகா் சூா்யா நேற்று சா்பரைஸாக சென்று ஒரு விசிட் அடித்திருக்கிறார். அங்கு தனது மகனு தேவ்வுடன் சோ்ந்து ரேக்ளா ரேஸ் சம்பந்தமான காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். மேலும் படக்குழுவினருடன் கலந்துரையாடி புகைப்படமும் எடுத்துள்ளார்.

இதை சூா்யா தனது ட்விட்டா் வலைத்தளத்தில் பதிவிட்டதோடு, ரேக்ளா ரேஸ் சம்பந்தமான புகைப்படங்களையும், வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் முடிந்த பின்னா் ஹீரோ கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினா் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக திருநெல்வேலி செல்ல திட்டமிட்டுள்ளனா். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை தமிழ் புத்தாண்டு சித்திரை மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது