சூர்யாவின் அடுத்த படத்தில் விஜய்-மகேஷ்பாபு நாயகி

நடிகர் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சூர்யா, செல்வராகவன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ராகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘ஸ்பைடர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்திலும் நாயகி ராகுல் ப்ரித்திசிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா மற்றும் செல்வராகவன் படத்தில் முதல்முறையாக இணையும் ராகுல் ப்ரித்திசிங்கிற்கு இந்த படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும் இந்த படம் அவருக்கு தமிழில் குறிப்பிட்டு சொல்லும்படியான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது