விரைவில் வெளியாகும் சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகததால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இது கூறித்து இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது “தானா சேர்ந்த கூட்டம்” படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் முழுமையாக முடியாததால் வெளியிட முடியவில்லை. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் போஸ்டரை விரைவில் வெளியிடுகிறேன் என சூர்யா ரசிகர்களிடம் கேட்டு கொண்டார்.