இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான ஆண்டனி !!!

இயக்குனர் சுசிந்திரன் அடுத்து இயக்கும் படம் அறம் செய்து பழகு. விக்ராந்த், சந்தீப் கிஷன் ஆகியோர் இப்படத்தில்  நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  ஆண்டனி என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார். இவர்  சி டிவி , ஏ.வி.எம் , ஸ்டுடியோ கிரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். கார்த்தி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ நான் மகான் அல்ல “ திரைப்படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் சுசீந்திரன் உடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்ப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனுடன் பல படங்களில் பணியாற்றிய பின்னர் அவரது  விருப்பத்தின் பெயரில் ஆண்டனி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

இது குறித்து ஆண்டனி கூறுகையில்,  இது இயக்குநர் சுசீந்திரன் எனக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்று தான் நான் சொல்வேன் , என்னென்றால் என்னை இந்த அறம் செய்து பழகு  திரைப்படத்தை தயாரிக்க சொன்னதே அவர்தான். என்னை தயாரிப்பாளராக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி என்றார்.