சேலையிலும் கிக்காக இருக்கும் அமலாபால்- சொல்வது யார் தெரியுமா?

திருட்டுப் பயலே வெற்றியை அடுத்து சுசி கணேசன் தற்போது இயக்கியுள்ள படம் திருட்டுப் பயலே2. பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் ஆகியோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை போன்றே இந்த படத்திலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான பாபி சிம்ஹாவும், அமலா பாலும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம்தான். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது குறித்து இயக்குனர் சுசி கணேசன் கூறியபோது,

இந்தப் படத்தின் ஹீரோயின் ஹோம்லியாகவும் இருக்க வேண்டும், அதேசமயம் கிளாமராகவும் இருக்க வேண்டும். அமலா பால் பொருத்தவரை சேலையிலும் கிளாமராக இருப்பார்  என்பதால் தான் அவரைத் தேர்ந்தெடுத்தேன் என்றார் அவர். மேலும் அமலாபாலின் இந்த புகைப்படம் வெளியானதும் இணையதளத்தில் படுவேகமாக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அந்தளவுக்கு அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறினார்.