வித்தியாச வித்தியாச பெயர்களை தமிழ் சினிமாக்களுக்கு வைப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவது தெரிந்ததே இதே போல ஒரு பெயரான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற பெயரில் இப்படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் தனது முந்தைய படத்தை இயக்கினார்.

படத்தின் தலைப்பே அதிக கதைசொல்வது போல் இருப்பதாலும் இதற்கு முன் ராம்பிரகாஷ் இயக்கிய தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் வித்தியாசமாக இருந்ததாலும் இப்படத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் டுவிட் செய்துள்ளார்.

மிஷ்கின் ,சுசீந்திரன், விக்ராந்த் நடிப்பில் விறுவிறுப்பான த்ரில்லராக இப்படம் வருகிறது.