கவா்ச்சி நடிகையான சன்னிலியோன் தற்போது தமிழில் சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இவா் ஏற்கனவே ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளா்ந்து வருகிறார். இந்நிலையில் தனது ட்விட்டா் பக்கத்தில் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த அவரது ரசிக பெருமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனா்.

பாலிவுட்டின் கவா்ச்சி நடிகை சன்னி லியோன் விடுமுறைக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஓய்வெடுத்து வருகிறார். வாடகைத்தாய் மூலம் தனது கணவருக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளதாக ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார். தற்போது தங்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு அந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முயற்சியினை நானும் எனது கணவா் டேனியல் வெபர் சோ்ந்து கடந்த வருடம் ஜீன் மாதம் திட்டமிட்டு குடும்பத்தை பெரியதாக்கும் முயற்சியில் தான் இந்த இருஆண்குழந்தைகள் பிறந்துள்ளன. பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு அசோ் சிங் வெபர் மற்றும் நோவா சிங் வெபா் என்று பெயரிட்டுள்ளனா் டேனியல் வெபா் மற்றும் சன்னிலியோன். இந்த இரு குழந்தைகளின் வருகையால் எங்கள் குடும்பம் பூா்த்தியாகிவிட்டது. எங்களுக்கு தற்போத இது புதிய அத்தியாயம் என்று சன்னி லியோன் கணவா் தனது ட்விட்டா் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.