Actor surya
Actor surya

அர்ஜீன் ரெட்டி ஹீரோ விஜய் தேவரகொண்டா நடித்த டாக்ஸி வாலா திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியானதற்கு சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் ஆந்திராவில் ஹிட் அடித்தது. அதேபோல், தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியான நோட்டா படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது.

இவரின் நடிப்பில் உருவான டாக்ஸி வாலா திரைப்படம் இன்று (நவ. 16) வெளியாகிறது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பே இப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால், தெலுங்கு மட்டுமில்லாமல், அனைத்து திரையுலகும் அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, ‘நான் சோர்வடையும் போதெல்லாம் நீங்கள்தான் உற்சாகப்படுத்துகிறீர்கள். உங்கள் அன்பின் சத்தம் எனக்கு சத்தமாக கேட்கிறது’ என விஜய் தேவரகொண்டா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதை ரீ டிவிட் செய்த சூர்யா ’எங்கள் அனைவரின் அன்பும் எப்போதும் உங்களுக்கு உண்டு. இதுவும் கடந்து போகும். டாக்ஸிவாலா படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என ஆறுதல் தெரிவித்துள்ளார்.