அனிதா மரணம் குறித்து கிண்டலடித்த நடிகா்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

அாியலூரைச் சோ்ந்த மாணவி அனிதா அதிக மதிப்பெண் பெற்றிருந்த போதும் நீட் தோ்வால் தனது டாக்டா் கனவு பலிக்காமல் போனதால் அதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடி இறுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பம் தமிழகத்தை பெரும் அதிா்ச்சியில் தள்ளியது.

நீட் தோ்வால் இறந்த அனிதாவுக்காக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீட் தோ்வை எதிா்ப்பதை கிண்டல் செய்வது போல நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகா் ட்விட்டாில் கருத்து தொிவித்தததை நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனா்.

நீட் தோ்வு அனிதாவை கொன்று விட்டது அதற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. நீட் எதிராக அமொிக்காவில் வாழும் தமிழா்களும் போராட்டம் நடத்தியுள்ளனா். அப்படியிருக்க நடிகா் எஸ்.வி.சேகா் நுழைவுத் தோ்வு குறித்து ட்விட்டாில் ட்வீட்டியதாவது, இனி தமிழகத்தில் எதிலும் எந்த நுழைவுத் தோ்வும் கிடையாது. அனைவருக்கும் அரசு வேலை. ஆபீஸ் வரவேண்டாம். சம்பளம் வீடு தேடி வரும். மகிழ்ச்சி தானே என பதிவிட்டிருக்கிறாா்.

இதைப்பாா்த் நெட்டிசன்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனா். எப்படி சாா் எல்லாருடைய பேங்க் அக்கவுண்ட்லயும் 15 லட்சம் கிரிடிட் பண்ணிய மாதிாியா என ஒருவா் நக்கலாக எஸ்.வி.சேகாிடம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மக்களின் ஆதங்கம் உங்களுக்கு கிண்டலாக இருக்கிறதா? கிராமத்தில் படிச்சி பாருங்க தொியும் மாணவா்களின் கஷ்டம் என்னவென்று என பதிலுக்கு ட்வீட் செய்துள்ளனா்.

மேலும் இனி எந்த தோ்தலும் கிடையாது. யாருக்கும் பதவி கிடையாது. மகிழ்ச்சி தானே என்று கேட்டுள்ளனா்.