ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி சம்யுக்தா விஜயன் என்ற திருநங்கையை முதன்மை திட்ட மேலாளராக நியமித்துள்ளது அந்நிறுவனத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த பொள்ளாச்சியில் பிறந்த திருநங்கையான சம்யுக்தா விஜயன் பேஷன் டிசைனராக பணியாற்றிவந்தார். திருநங்கைகளுக்கான பேஷன் டிசைன் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வந்த இவர, இப்போது ஸ்விக்கியில் பிரின்சிபல் புரோகிராம் மேனேஜராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள சம்யுக்தா ’ கார்ப்ரேட் நிறுவனங்கள் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், ஆனால் அந்த கார்ப்ரேட் நிறுவனங்கள், திருநங்கைகளுக்கான ஆதரவு குழுக்களை கட்டமைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். மேலும் திருநங்கைகளுக்கு குடும்பத்தின் ஆதரவு இருந்தால் அவர்களால் அனைத்துத் துறைகளிலும் சாதிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.