Simbu Athi Varadhar wedding – நடிகர், இயக்குனர் மற்றும் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இன்று காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளர்.

அத்திரவரதரை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த டி.ஆர் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:

சிம்பு வெளிநாட்டில் இருந்தாலும் ‘காஞ்சிபுரம் போய் அத்திவரதரை தரிசனம் பண்ணீங்களாப்பா?’ எனக் கேட்டான். எனவே, அவரின் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக அத்திவரதரை தரிசிக்க வந்தேன். சிம்புவிற்கு சரியான பெண்ணை தேர்ந்தெடுத்து கொடுக்க பெருமாளால்தான் முடியும்.

சிம்புவிற்கு ஒரு சாதரண பெண்ணை தேர்ந்தெடுக்க முடியாது. அவன் மனதுக்கு ஏற்ற, அவனுடைய குணத்துக்கு ஏற்ற ஒரு மணமகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் அது அத்திவரதால் மட்டுமே முடியும்’ என டி.ராஜேந்தர் தெரிவித்தார்.