விஷால்,சமந்தா,அர்ஜூன் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான படம் இரும்புத்திரை. மித்ரன் இயக்கியுள்ள இப்படம் டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது

இந்த சூழ்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், நடிகர்கள் ராதாரவி உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் அவர்கள் பேட்டியளிததனர். அப்போது டி.ராஜேந்தர் பேசியபோது,

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. துப்பறிவாளன் படத்தில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா? தமிழ் ராக்கர்சை பிடித்து விட்டேன். நெருங்கி விட்டேன் என்றெல்லாம் கூறினார். எங்கே போனார்கள் தமிழ் ராக்கர்ஸ். எங்கே போனது ரூ.7 கோடி வைப்புநிதி என்று பதில் சொல்ல முடியுமா? ஒரு படத்திற்கு 200 திரையரங்குகள் தான் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கூறிவிட்டு, அவருடைய படமான இரும்புத்திரை’ படத்தை மட்டும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறார்.இந்தநிலை மாற வேண்டும் என்று பேசினார்.