T.Rajendhar Met Vijayakanth : தேமுதிக தலைவர் விஜயகாந்தை டி.ராஜேந்திர் சந்தித்து பேசியுள்ளார்.

டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான குறளரசன் விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசனோடு சந்தித்தார். அப்போது, குறளரசனின் திருமண அழைப்பிதழை அவர் விஜயகாந்திடம் வழங்கினார்.

அப்போது எடுத்தத புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜயகாந்த் “இயக்குநர்-இசையமைப்பாளர்-நடிகர்-சகோதரர் விஜய.T.ராஜேந்தர் அவர்கள், எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவுகூர்ந்தோம். குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.