நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தர் இன்று தனது அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்த நிலையில் சற்றுமுன் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் கட்சியின் பெயர்ப்பலகையையும் அவர் திறந்து வைத்தார். அவரது கட்சியின் பெயர்ப்பலகையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இருந்தன. இதன்பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.