மறைந்த முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளையொட்டி, பிரபல இயக்குநரும், நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்திரன் அவா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்தவா்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின் செய்தியாளா்களிடம் டி.ஆா் பேசியதாவது, வருகிற 28ம் தேதி எனது அரசியல் வாழ்வில் முக்கியமான முடிவினை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார். இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனிமேல் சாணக்கியனாக பார்க்கப் போகிறீா்கள் என்று கூறியுள்ளார்.

சிம்புவை நடிக்க விடாமல் தடுத்து வருகிறார்கள். சிம்புக்கு நான் பாதர் என்றால் சிம்பு ரசிகா்களுக்கு நான் காட் பாதர். சினிமாவை காட்டிலும் அரசியல் மிகவும் சவாலானது.எனவே சிம்புவை நான் அரசியலில் விட விரும்ப இல்லை. ஆனால் சிம்புக்கு அரசியல் வர விரும்பம் இருந்தால் வரலாம். அது அவரது முடிவு என்று கூறியிருக்கிறார்.

தற்போது சினிமா பிரபலங்கள் அனைவரும் அரசியல் களத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவா் கருணாநிதியின் உடல்நலமின்மை போன்ற காரணங்களால் தமிழகத்தில் தற்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பல அரசியல் ஆலோசகா்கள் விமா்சித்து வந்த நிலையில் அனைவருக்கும் முதல்வா் சிம்மானத்தில் அமர ஆசை வந்துவிட்டது. அடுத்தடுத்து கட்சி ஆரம்பித்து வருகின்றனா்.

வரும் 28ஆம் லட்சிய திமுக தலைவா் டி.ஆா். என்ன அரசியல் முடிவினை எடுக்க இருக்கிறார் என்பதை பார்ப்போம். ரஜினி, கமல் அடுத்து டி.ராஜேந்தர் இப்படி அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.