சம்பளம் இல்லாமல் நடித்த டாப்சி!


டாப்சி பன்னு, சமீபத்தில் ‘ஆனந்தோ பிரம்மா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் டாப்சி சம்பளம் ஏதும் வாங்காமல் இலாப பகிர்வு அடிப்படையில்’ஆனந்தோ பிரம்மா’ படஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். மேலும் இதில் முதன்மை ஹீரோக்கள் யாரும் இல்லை. இருப்பினும் கதையின் மீது கொண்ட நம்பிக்கையில் டாப்சி சம்பளம் ஏதும் வாங்காமல் நடித்துக்கொடுத்தள்ளார்.

இதைப் பற்றி கூறுகையில், டாப்சி “எனது வாழ்க்கையில் இது மிகப்பெரிய சூதாட்டம் என்றாலும் கதையின் மீதுகொண்ட நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்”  என்று கூறினார்.
இவரது கணிப்பு சரியாகி, இப்போது இந்த குறைந்த பட்ஜெட் படம்  இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கணிசமான வசூலை ஈட்டிவருகிறது.

‘ஆனந்தோ பிரம்மா’,பேய்கள் மனிதர்களுக்குப் பயப்படுவதான கதைக்களம் அமைந்துள்ள, ஒரு வித்தியாசமான ஹாரர்-காமெடி பேய் படமாகும்.