குறிச்சொல்: அஜித்

தல பிறந்த நாளில் வெளியாகும் ‘எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் பாடல்

தல பிறந்த நாளில் வெளியாகும் ‘எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் பாடல்

சற்றுமுன், செய்திகள்
வரும் மே 1ஆம் தேதி தல அஜித் பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நாளில் 'எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம்' என்ற சிங்கிள் பாடலை யுவன்ஷங்கர் ராஜா வெளியிடவுள்ளார். இந்த பாடல் ஆர்.கே.சுரேஷ் நடித்து வரும் 'பில்லா பாண்டி' என்ற ப்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் தல ரசிகர் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க தல பெருமையை கூறும் இந்த பாடலுக்கு இளையவன் என்பவர் இசையமைத்துள்ளார். ராஜ்சேதுபதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்
காவிரி போராட்டம்: வழக்கம்போல ஆப்செண்ட் ஆன அஜித்

காவிரி போராட்டம்: வழக்கம்போல ஆப்செண்ட் ஆன அஜித்

சற்றுமுன், செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும்,ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். தமிழர்கள் நலனுக்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் வழக்கம்போல டிமிக்கி கொடுத்தார். பொதுவாகவே எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத அவர் தமிழர்களுக்கான போராட்டத்தில் கலந்துகொள்ளாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
அஜித்தும் விஜய்யும் ரொம்ப பாவம்:சித்தார்த்

அஜித்தும் விஜய்யும் ரொம்ப பாவம்:சித்தார்த்

சற்றுமுன், செய்திகள்
திரைத்துறையினர் கட்ந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் விஜய் படம் உள்ளிட்ட ஒருசில படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்துள்ளது பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வரும் நிலையில் நடிகர் சித்தார்த்தும் தனது பங்காக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் கண்டனமும், அஜித் ரசிகர்கள் ஆதரவும் தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டையாக மாறிவிட்டது. இதுகுறித்து சித்தார்த் வருத்தத்துடன் கூறியதாவது: இவர்களது அநாகரீக வாக்குவாதத்தால் ஒரு பைசா கூட பிரயோசனம் இல்லை. சில வேலையில்லாத முட்டாள்களால் அனைவருக்கும் கஷ்டம் பாவம் அஜித்தும் விஜய்யும் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய அஜித்-ஷாலினி

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய அஜித்-ஷாலினி

சற்றுமுன், செய்திகள்
கடந்த மாதம் திடீரென மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவி இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீதேவிக்கு மிகவும் நெருக்கமான குடும்பங்களில் ஒன்று அஜித் குடும்பம். அஜித்தும், ஷாலினியும் வாரம் ஒருமுறை ஸ்ரீதேவியுடன் போனில் பேசுவார்களாம். இந்த நிலையில் நேற்று சென்னையில் ஸ்ரீதேவியின் 16ஆவது நாள் சடங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட அஜித், ஷாலினி, போனிகபூர் மற்றும் அவரது மகள்களுக்கு நேரில் ஆறுதல் கூறினர்.
அஜித்தின் அரசியல் படத்தில் ‘அறம்’ இயக்குனர்

அஜித்தின் அரசியல் படத்தில் ‘அறம்’ இயக்குனர்

சற்றுமுன், செய்திகள்
அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது பிரபுதேவா என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், இந்த படம் இன்றைய அரசியல் சூழ்நிலைகளை விளக்கும் ஒரு அதிரடி படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு 'அறம்' இயக்குனர் கோபிநயினார் வசனம் எழுதவுள்ளதாகவும் தெரிகிறது. கோபியின் கனல் கக்கும் அரசியல் வசனத்தில் அஜித் நடிக்கவுள்ளதால், அஜித் இந்த படத்தின் மூலம் அரசியல் ஆழத்தை பார்க்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
ரஜினி, கமல், அஜித், மம்முட்டி படங்களின் ஹீரோயின் ஆகும் நயன்தாரா

ரஜினி, கமல், அஜித், மம்முட்டி படங்களின் ஹீரோயின் ஆகும் நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
நடிகை நயன்தாரா கடந்த 15 வருடங்களாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை அனைத்து முக்கிய நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார். இந்த நிலையில் ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படம், கமல்-ஷங்கர் படம், அஜித்-சிவா படம் மற்றும் மம்முட்டி நடிக்கவுள்ள தெலுங்கு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் உண்மையென்றால் ஒரே நேரத்தில் 4 முன்னணி நடிகர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமை நயன்தாராவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அஜித்தின் ‘விசுவாசம்’ பட வதந்திக்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்

அஜித்தின் ‘விசுவாசம்’ பட வதந்திக்கு மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அவை அதிகாரபூர்வமாக இன்னும் ஒருசில நாட்களில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'விசுவாசம்' திரைப்படம் அஜித் நடிக்கும் முதல் ஹாரர் திகில் திரைப்படம் என்று ஒருசில இணையதளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் தற்போது மறுத்துள்ளது. விசுவாசம் திரைப்படம் பக்கா கமர்ஷியல் படம் என்றும், இது திகில் படம் இல்லை என்றும் சத்யஜோதி நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் வீரம், வேதாளம் போன்று இந்த படத்திலும் ஒரு வலுவான பிளாஷ்பேக் காட்சிகள் இருப்பதாகவும், அந்த காட்சிகள்தான் படத்தின் ஹைலைட் என்றும் கூறப்படுகிறது
அஜித் அடுத்த படம் இவருக்குத்தான்: உறுதியான தகவல்

அஜித் அடுத்த படம் இவருக்குத்தான்: உறுதியான தகவல்

சற்றுமுன், செய்திகள்
விவேகம் படத்தை அடுத்து அஜித் இயக்குனர் சிவா இயக்கத்திலேயே விஸ்வாச்ம் படத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படம் இன்னும் துவங்கப்படுவதற்குள் அஜித் அடுத்த படம் குறித்த தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் அஜித்திடம் ஒரு கதை சொன்னதாகவும் கதை பிடிக்கவே அடுத்த படத்தை வினோத் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அஜித் அடுத்த படத்தை இயக்குபவர் பிரபுதேவா என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகவே கூறப்படுகிறது. இந்த படத்தை நயன்தாராவின் மேனேஜர் ராஜேஷ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே அறம் வெற்றிப் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் விசுவாசம்’ படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

அஜித்தின் விசுவாசம்’ படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்

சற்றுமுன், செய்திகள்
அஜித் நடிக்கவுள்ள விசுவாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் திடீரென டுவிட்டரில் இந்த படம் டிராப் என வதந்தி பரவி வருகிறது. இயக்குனர் சிவாவின் போலி டுவிட்டர் பக்கத்தில் விசுவாசம் படம் டிராப், சாரி தல ரசிகர்களே' என்று பதிவு செய்யப்பட்டுள்ளதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இயக்குனர் சிவாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்தே இந்த படம் டிராப் என்றும் வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இவையனைத்தும் வதந்தியே என்றும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.
விசுவாசம்: அஜித்தின் முதல் திகில் படமா?

விசுவாசம்: அஜித்தின் முதல் திகில் படமா?

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படம் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி 'விசுவாசம்' திரைப்படம் ஒரு திகில் படம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இது உண்மையெனில் அஜித்தின் முதல் திகில் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமத்தில் தொடங்கி சென்னையில் முடிவடையும் இந்த படத்தின் திரைக்கதை சிவாவின் முந்தைய படங்களின் திரைக்கதையில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.