குறிச்சொல்: ஆப்பு

சூர்யாவுக்கு ஆப்பு வைத்தாரா விஷால்?

சூர்யாவுக்கு ஆப்பு வைத்தாரா விஷால்?

சற்றுமுன், செய்திகள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று பெங்களூரில் நடந்த கன்னட படவிழா ஒன்றில் காவிரி பிரச்சனை குறித்து வீரமாக பேசினார். இந்த பேச்சு மேடையில் இருந்தவர்களையே அதிர வைத்தது. இந்த நிலையில் விஷாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மைசூரில் நடைபெறவிருந்த சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பின்போது கன்னடர்கள் சிலர் கலாட்டா செய்தனர். இதனால் வேறு வழியின்றி படக்குழுவினர் பேக்கப் செய்து சென்னை திரும்பிவிட்டனர். விஷால் வீரமாக பேசிவிட்டு வந்ததன் விளைவு தற்போது அந்த பேச்சு சூர்யாவின் படத்திற்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைந்துவிட்டது.
அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு வைத்த விஷால்!

அஜித், விஜய் படங்களுக்கு ஆப்பு வைத்த விஷால்!

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படம் வரும் தீபாவளி தினத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் எடுத்துள்ள ஒரு அதிரடி நடவடிக்கையால் திட்டமிட்டபடி அஜித், விஜய் படங்கள் உள்பட மற்ற படங்களும் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் விஷால் ஒருசில கோரிக்கைகளை வெளியிட்டு அதனை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும், இல்லையேல் ஜூன் 1 முதல் அனைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு இப்போதைக்கு விஷாலின் கோரிக்கைகளை படித்து பார்க்க கூட நேரமில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷால் ஜூன் 1 முதல் வேலைநிறுத்தம் செய்ய  முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் மாதக்கணக்கில் இழுத்தால் ஒருபக்கம் தினக்கூல