குறிச்சொல்: இரும்புத்திரை

இது நட்சத்திர கலைவிழாவா? விஷால் கலைவிழாவா? நடிகர்கள் புலம்பல்

இது நட்சத்திர கலைவிழாவா? விஷால் கலைவிழாவா? நடிகர்கள் புலம்பல்

சற்றுமுன், செய்திகள்
ஜனவரி 6ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு ரஜினி, கமல் உள்பட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் இந்த விழாவின்போது விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் டிரைலர் மற்றும் அவர் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தின் டீசர் ஆகிய இரண்டும் வெளியாகவுள்ளதாம் இந்த நிலையில் இது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவா? அல்லது விஷாலின் திரைப்பட கலைவிழாவா? என்று முனங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு படங்களின் புரமோஷன் தவிர வேறு படங்களின் புரமோஷன் இந்த விழாவின் இடையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகரில் என் வேட்புமனு ரிஜக்ட் ஆக வேண்டியவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

ஆர்.கே.நகரில் என் வேட்புமனு ரிஜக்ட் ஆக வேண்டியவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

சற்றுமுன், செய்திகள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த 'இரும்புத்திரை' டிரைலர் வெளியிட்டு விழாவில் இதுகுறித்து நகைச்சுவை கருத்தை விஷால் தெரிவித்தார் நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது பலர் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் மித்ரன். நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டிருந்தால் 'இரும்புத்திரை' திரைப்படம் இன்னும் காலதாமதம் ஆகியிருக்கும். எனவேதான் மித்ரன் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று சாமியை கும்பிட்டார். அவருடைய வேண்டுதல் பலித்துவிட்டது. என்னைப் பற்றி பல்வேறு கருத்துகள், அவதூறுகள் வரலாம். ஆனால், நான் கண்ணாடியைப் பார்க்கும்போது என்னை நான் குற்றமற்றவனாக பார்க்க வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் நடக்கிறேன். கண்ணாடிதான் என் நண்பன். என்று விஷால் பேசினார்.
இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவின் புகைப்படங்களை பார்ப்போம்
விஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா

விஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா

சற்றுமுன், செய்திகள்
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் சமந்தா பேசியதாவது: நான் விஜய், சூர்யாவுடன் நடிக்கும்போது அவர்களை சார், சார் என மரியாதையுடன் கூப்பிடுவேன். அவர்களுடன் நெருக்கமாக பழக தயங்குவேன். ஆனால் விஷாலுடன் நடிக்கும்போது எனக்கு ஜாலியாக இருந்தது என்னைவிட இளையவருடன் பழகுவது போன்று சகஜமாக பழகினேன். இந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து வாய்ப்பு கொடுத்த விஷாலுக்கும், இயக்குனர் மித்ரனுக்கும் எனது நன்றி 'பாணா காத்தாடி' படத்திற்கு பின்னர் யுவன் இசையில் நடிக்கும் படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும்' என்று சமந்தா பேசினார்
பெண் சைக்காலஜி டாக்டருடன் விஷால் கைகோர்த்தது ஏன்?

பெண் சைக்காலஜி டாக்டருடன் விஷால் கைகோர்த்தது ஏன்?

சற்றுமுன், செய்திகள்
விஷால், சமந்தா நடித்து வரும் 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஷால், சமந்தா நடித்த கேரக்டர்கள் குறித்த தகவலை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர் இதன்படி விஷால் மேஜர் ஆர்.கதிரவன் என்ற கேரக்டரிலும், சமந்தா டாக்டர் ரதிதேவி பி.எச்.டி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். மேஜர் விஷால், சைக்காலஜி டாக்டருடன் கைகோர்த்து எதிரிகளை பந்தாடுவது தான் கதையாம் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விஷால் வீட்டில் இத்தனை கோடி ரூ.2000 நோட்டுக்களா? அதிர்ச்சி வீடியோ

விஷால் வீட்டில் இத்தனை கோடி ரூ.2000 நோட்டுக்களா? அதிர்ச்சி வீடியோ

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் நடிகர் விஷால் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தது தெரிந்ததே. அவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது. இந்த வீடியோவில் கோடிக்கணக்கான மதிப்புடைய ரூ.2000 நோட்டுக்கள் ஒரு மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதிகாரி ஒருவர் விஷாலை விசாரணை செய்வது போன்ற காட்சி இருந்தது. இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் அந்த வீடியோவில் ஆக்சன் கிங் அர்ஜூன் திடீரென வந்து அதிகாரி போல் கேள்வி கேட்டு கொண்டிருந்தவரை மேக்கப் போடாமல் இங்க என்ன வெட்டியா இருக்க? என்று கூறி அனுப்பி வைத்தார். அப்போதுதான் அது ஒரு செட்டப் வீடியோ என்பது தெரியவந்தது. விஷால், அர்ஜூன், சமந்தா நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் வருமான வரி சோதனை போன்ற ஒரு காட்சி உள்ளதாகவும், அந்த காட்சிக்காக வைக்கப்
காமெடி காட்சிகளில்  கலக்கும் சமந்தா!!!

காமெடி காட்சிகளில் கலக்கும் சமந்தா!!!

சற்றுமுன், செய்திகள்
மித்ரன் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்து கொண்டிருக்கும் படம் இரும்புத்திரை. இந்த படத்தில் முதன்முறையாக பல காமெடி காட்சிகளில் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் நடித்தது கொண்டிருக்கிறார். காமெடி காட்சிகளில் இவருடன் ரோபோ சங்கர் நடிக்கிறார். எனவே இருவர் இணைந்து நடித்திருக்கும் காமெடி காட்சிகள் திரையரங்குகளில் பெரிய கைத்தட்டல் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.  ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்தது இனிமேல் தான் நடிக்கும் படங்களில் காமெடிக்கு முன்னுரிமை கொடுக்க போவதாக சொல்கிறார் சமந்தா. மேலும் அநீதி கதைகள் , விஜயின்-61  மற்றும் மகாநிதி என பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.