குறிச்சொல்: ஏ.ஆர்.ரகுமான்

‘சங்கமித்ரா’வில் ஸ்ருதிக்கு பதிலாக வேறு ஹீரோயின் கிடைச்சாச்சு?

‘சங்கமித்ரா’வில் ஸ்ருதிக்கு பதிலாக வேறு ஹீரோயின் கிடைச்சாச்சு?

சற்றுமுன், செய்திகள்
வரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவிருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இயக்கவிருக்கிறது. ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ருதிஹாசன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி, பின்னர் இப்படத்தில் இருந்து அவர் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில், இப்படத்தில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்க வைக்க பிரபல நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், எம்.எஸ்.தோனி படத்தில் கதாநாயகியாக நடித்த திஷா பதானி என்பவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளில் தற்போது ஐதராபாத்தில் விற
தலைப்பு பிரச்சினை: மெர்சல் தலைப்பு மாறுகிறதா?

தலைப்பு பிரச்சினை: மெர்சல் தலைப்பு மாறுகிறதா?

சற்றுமுன், செய்திகள்
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மெர்சல்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. தமிழ் படங்கள் செய்த சாதனைகளையும் முறியடித்துள்ளது. இந்நேரத்தில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை தான் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருப்பதாகவும், எனவே ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் ‘மெர்சல்’ படக்குழுவினருக்கு அந்த பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்ய தடை செய்தது. மேலும், தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸுக்கும் பதிலளிக்க உத்தரவிட்டது. கோர்ட்டில் ‘மெர்சல்’ தலைப்பை பயன்படுத்த தடை வருமேயானா
20 மணி நேரத்தில் 1 கோடியை தொட்ட மெர்சல் டீசர்

20 மணி நேரத்தில் 1 கோடியை தொட்ட மெர்சல் டீசர்

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்கள் எல்லாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், இப்படத்தின் டீசருக்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த வகையில், இப்படத்தின் டீசர் அட்லி பிறந்தநாளான செப்டம்பர் 21-ந் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று மாலை 6 மணிக்கு ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த டீசரை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தது. அதேநேரத்தில், இப்படத்தை லைக் செய்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்களில் இருந்தது. இந்த டீசர் வெளியிட்டு 20 மணி நேரம் ஆகியுள்ள நிலையில், இதை கண்டுகளித்தோரின் எண்ணிக்கை 1 கோடியை தொ
படப்பிடிப்பை முடித்து பார்சிலோனா பறந்த விஜய்?

படப்பிடிப்பை முடித்து பார்சிலோனா பறந்த விஜய்?

சற்றுமுன், செய்திகள்
விஜய் எப்போதும் தன்னுடைய படம் தொடங்குவதில் இருந்து முடியும் வரைக்கும் ஓய்வு என்பதை எடுத்துக் கொள்வதே கிடையாது. அதேநேரத்தில் படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக குடும்பத்துடன் வெளிநாடு கிளம்பி சென்று அங்கு விடுமுறையை குதூகலமாக கழித்துவிட்டு வருவது வழக்கம். அதேபோல்தான், ‘மெர்சல்’ படத்திற்காக கடந்த 2 மாத காலமாக கடுமையாக உழைத்த விஜய் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஓய்வுக்காக பார்சிலோனா பறந்து சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு, ‘மெர்சல்’ படம் ரிலீசுக்கு முன்னதாக சென்னைக்கு திரும்பவுள்ளதாக செய்திகள் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் இணைந்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தின் டீசர் நாளை வெளியாகவிருக்கிறது. அதற்கான போஸ்டர் இன்று வெளியிட்டுள்ளன
இத்தனை கோடியில் உருவாகியிருக்கிறதா மெர்சல்?

இத்தனை கோடியில் உருவாகியிருக்கிறதா மெர்சல்?

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படம் ‘மெர்சல்’. ‘தெறி’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து இருக்கிறது. இந்நிலையில், இப்படம் சுமார் ரூ135 கோடி செலவில் உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் ‘புலி’ படம்தான் ரூ.100 கோடி பட்ஜெட்டில் வெளிவந்த ஒரே படம். தற்போது இந்த படம் ரூ.100 கோடியை தாண்டி ரூ.135 கோடியில் உருவாகி அந்த சாதனையை முறியடித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்தை வாங்க போட்டி போட
குருபெயர்ச்சிதான் சிம்புவையும், மணிரத்னத்தையும் இணைத்தது: டி.ராஜேந்தர் ஆரூடம்

குருபெயர்ச்சிதான் சிம்புவையும், மணிரத்னத்தையும் இணைத்தது: டி.ராஜேந்தர் ஆரூடம்

சற்றுமுன், செய்திகள்
யாரும் எதிர்பார்க்காத வகையில் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர்மட்டுமில்லாமல், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பஹத் பாசில், நானி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளது. இந்நிலையில், மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பது குறித்து டி.ராஜேந்தர் கூறும்போது, இயக்குனர் மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வி.யும் நானும் நெருங்கிய நண்பர்கள். மணிரத்னமும் எனது நண்பர்தான். கடந்த செப்.2-ந் தேதி குருபெயர்ச்சியன்று மணிரத்னம் தன்னை வந்து பார்க்கச் சொன்னதாக சிம்பு என்னிடம் சொன்னார். ரஜினி, கமல் போன்ற மிகப்பெரிய நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை கொடுத்தவர், ஆஸ்கர் விருது வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமானை அறிமுகப்படுத்தியவர். அந்த வகையில் பார்த்தால் மணிரத்னம் குரு ஸ்தானத்தில் இருப்பவர்தான். எனவே, உனக்கு சரியென்று பட்டால் போய்
இணையதளத்தில் புதிய மைல் கல்லை தொட்ட மெர்சல்

இணையதளத்தில் புதிய மைல் கல்லை தொட்ட மெர்சல்

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீதேனான்டாள்  பிலிம்ஸ் தனது 100-வது படமாக இதை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் பாடல்களும் விஜய்யின் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களின் பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை மட்டும் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். பாடலுக்கே இந்தளவுக்கு வரவேற்பு இருக்கும்போது, இப்படத்தின் டீசருக்கும், டிரைலருக்கும் எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது. அதனால் விரைவில், இப்படத்தின் டீசரையும், டிரைலரையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா,
துபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர்: 2.ஓ புதிய அப்டேட்

துபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர்: 2.ஓ புதிய அப்டேட்

சற்றுமுன், செய்திகள்
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கிற ‘2.ஓ’ படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் ஒன்றை படத்தை தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள 2.ஓ. படத்தின் பாடல் வெளியீட்டை வருகிற அக்டோபர் மாதம் துபாயில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் டீசரும், சென்னையில் டிரைலரையும் அடுத்தடுத்து வெளியிடவிருக்கிறார்களாம். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இப்படம் வெளியிட தயாராகி வருகிறது. ரஜினியின் ‘எந்திரன்’ பட வரிசையில் வெளிவர காத்திருக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எமி
இசையுலகில் 25 வருடங்களை கடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்….

இசையுலகில் 25 வருடங்களை கடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்….

சற்றுமுன், செய்திகள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமா உலகில் இசையமைக்கத்  தொடங்கி இன்றோடு 25 வருடங்கள் கடந்துவிட்டன. பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த ஏ.ஆர்.ரகுமானை, இயக்குனர் மணிரத்னம் தனது ‘ரோஜா’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது. அந்த படத்தில் அவர் கொடுத்த இசை புதியதாகவும், வேறு மாதிரியும் இருந்தது. பாலிவுட் முதல் டோலிவுட் வரை யார் இவர்? என ஆச்சர்யமாக பார்த்தார்கள். அதன் பின் ஜென்டில்மேன், காதலன் என அவர் காட்டிய இசை துள்ளல் அனைவரையும் ஆட செய்தது. இசைப்புயல் என்ற பட்டம் அவருக்கு வந்து சேர்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்று தமிழனுக்கு பெருமை சேர்த்தார். ரோஜா திரைப்படம் ஆகஸ்டு 15ம் தேதி 1992ம் ஆண்டு வெளியானது. இன்றோடு, இசையுலகில் 25 வருடங்களை கடந்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான்.இத்தனை வருடங்கள