குறிச்சொல்: கமல்ஹாசன்

கமல்ஹாசனுக்கு பின்னர் ‘தேவர்’ டைட்டில் படத்தில் கவுதம் கார்த்திக்

கமல்ஹாசனுக்கு பின்னர் ‘தேவர்’ டைட்டில் படத்தில் கவுதம் கார்த்திக்

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் நடித்த 'தேவர் மகன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை போற்றும் வகையில் அந்த படம் இருந்ததாக ஒருசிலர் விமர்சித்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு 'தேவர்' பட டைட்டிலில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளார். இவர் அதே சமூகத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் டைட்டில் தான்'தேவர் ஆட்டம். இந்த படத்தின் டைட்டிலில் ஜாதி இருந்தாலும் இதுவொரு பொழுதுபோக்கு படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சி: கமல்ஹாசன் அறிவிப்பு

பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சி: கமல்ஹாசன் அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகவும், தனது சுற்றுப்பயணத்தை ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கவிருப்பதாகவும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. அக்கடமைகளின் தொடக்கமாய் எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொடங்கஇருக்கிறேன். ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்
ரஜினிக்கு இரவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்

ரஜினிக்கு இரவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரை பாராட்டாத விஐபிக்களே இல்லை என்று கூறலாம் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமிதாப்பச்சன், ஷாருக்கான், உள்பட பலர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர் இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல்ஹாசன் நேற்று பகல் முழுவதும் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தது கமல், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்தது இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் கமல் தனது டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து டுவீட்டில் கூறியதாவது: சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். கமல்
டெல்லியில் கமல்-ரூபா சந்திப்பு

டெல்லியில் கமல்-ரூபா சந்திப்பு

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் டெல்லியில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா அவர்கள், இந்த நிகழ்ச்சியின் இடையே கமல்ஹாசனை சந்தித்துள்ளார். இதுகுறித்த தகவலை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். .அதில் அவர் கூறியதாவது, 'தமிழக நண்பர்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்து கொள்கிறேன். நடிகர், இயக்குனர் கமல்ஹாசனை டெல்லி நிகழ்ச்சியில் சந்தித்தேன். இந்த நிமிடம் எனது மகிழ்ச்சிக்குரி நேரம்' என்றுதெரிவித்துள்ளார். சமீபத்தில் சசிகலா கர்நாடக சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்தார் என புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் இந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
வருமுன் காப்போம்-கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்து

வருமுன் காப்போம்-கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
      தற்போது கமல்ஹாசன் அரசியலில் இறக்க போகிறார் என்ற செய்தி அறிவித்துள்ள நிலையில், வடசென்னைக்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், `தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்ரைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம். (Vallur Thermal Plant) வல்லூர் மின் நிலையமும் வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளை கோசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன.  &
‘மெர்சல்’க்கு ஆதரவளித்த சூப்பர் ஸ்டார், உலக நாயகன்

‘மெர்சல்’க்கு ஆதரவளித்த சூப்பர் ஸ்டார், உலக நாயகன்

சற்றுமுன், செய்திகள்
            அட்லி, விஜய் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் சில அரசியல் பிரமுகர்களால் சர்ச்சைக்குள்ளான நிலையில் இன்னொரு பக்கம் இப்படத்திற்கு சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ‘மெர்சல்’ படத்திற்கு சமீபத்தில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த பட சர்ச்சை குறித்து, ‘ஏன் ரஜினிகாந்த எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை?’ என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் ரஜினிகாந்தும் ‘மெர்சலு’க்கு ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘மெர்சலி’ல் முக்கியமான ஒரு பிரச்சனை பேசப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.   &n
‘மெர்சல் ஒரிஜினல் நாயகனும் ஜெராக்ஸ் காப்பிகளும்

‘மெர்சல் ஒரிஜினல் நாயகனும் ஜெராக்ஸ் காப்பிகளும்

சற்றுமுன், செய்திகள்
உலக நாயகன் கமல்ஹாசன் மூன்று வேடத்தில் நடித்த சூப்பர் ஹிட் படமான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் காப்பி தான் 'மெர்சல்' என்ற விமர்சனம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது. அதற்கு காரணம் பாஜக தமிழக தலைவர்களான தமிழிசை மற்றும் எச்.ராஜா என்று கூறினால் மிகையாகாது. இந்த நிலையில் பல சோதனைகளை சந்தித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தை இன்று கமல்ஹாசன் பார்த்தார். அவருடன் விஜ்ய, மற்றும் இயக்குனர் அட்லியும் படம் பார்த்தனர். கமல்ஹாசனுடன் அட்லி மற்றும் விஜய் இருக்கும் புகைப்படத்தையும் அட்லி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில் இந்த புகைப்படத்தின் பின்னணியில் அபூர்வ சகோதரர்கள்' படத்தின் போஸ்டர் உள்ளது. தான் காப்பி அடித்ததை அட்லி ஒப்புக்கொண்டுள்ளரா? என்பதையே இந்த புகைப்படம் உணர்த்துகிறது.
அர்ச்சகர்கள் நியமனம் : கமல்ஹாசன் கருத்து

அர்ச்சகர்கள் நியமனம் : கமல்ஹாசன் கருத்து

சற்றுமுன், செய்திகள்
            உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் சார்ந்த,சமூகம் சார்ந்த கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துவரும் நிலையில் இன்று அர்ச்சகர் நியமனம் குறித்த தனது கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.           அதில் அவர் கூறியிருப்பதாவது, திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம். 'இவ்வாறு கூறியிருக்கிறார்.           திருவாங்கூர் தேவஸ்தானத்தில் 36 பிராமணர்கள் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கும் வாழ்த்து தெரிவித்து தலைவணங்குவதாக கூறியிருக்
பாஜகவுடனும் கூட்டணி சேர தயாா்:கமல்ஹாசன்

பாஜகவுடனும் கூட்டணி சேர தயாா்:கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
கமல் அரசியல் பற்றி அவ்வப்போது தனது கருத்தை தொிவித்து வருகிறாா். நேரடியாகவும், ட்விட்டா் வலைத்தளத்தின் வாயிலாகவும் மாநில அரசின் எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகிறாா். நாட்டில் ஊழல் மலிந்த விட்டதாகவும் அதை அகற்ற அரசியலுக்கு வருகிறேன் என்று கமல் கூறினாா். விரைவில் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், கட்சியின் சின்னம், கட்சியின் பெயா், கொடி உருவாக்கும் பணியை தொடங்கி விட்டேன் என்று நடிகா் கமல் தொிவித்து உள்ளாா். இந்நிலையில் பத்திாிக்கையாளா்களுக்கு அளித்த பேட்டியில் கமல் சொன்னது எனது அவா்களின் கொள்கைகளில் ஈடுபாடு கிடையாது. அரசியலில் தீண்டாமை என்று எதுவும் கிடையாது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்து என் மக்களுக்கு நல்லது என்றால் நிா்வாக ரீதியாக தேவைப்பட்டால் இணைந்து செல்வேன். தோ்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று
சினிமாவிற்கு முழுக்கு – அதிர்ச்சி கொடுக்கும் கமல்ஹாசன்

சினிமாவிற்கு முழுக்கு – அதிர்ச்சி கொடுக்கும் கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
அரசியலில் களம் இறங்கிய பின் சினிமாவிற்கு முழுக்குப் போட இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே, ஊழல் மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கம், ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து வருகிறார். அதோடு, விரைவில் தான் அரசியலுக்கு வருவேன். அது மக்களுக்கான கட்சியாக இருக்கும். ஊழலை ஒழிப்பதுதான் முதல் வேலை எனக்கூறியுள்ளார். அதேபோல், அரசியலுக்கு வந்த பின் சினிமாவிலிருந்து விலகி விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி அவரின் தீவிர ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.