குறிச்சொல்: கமல்

விகடன் விருது வழங்கும் விழாவில் கமல்-விஜய்

விகடன் விருது வழங்கும் விழாவில் கமல்-விஜய்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
சமீபத்தில் விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. கமல்ஹாசன், விஜய், நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவின் புதிய அசத்தலான புகைப்படங்கள் இதோ:
கமல் ஆதரித்த முதல்வரின் லட்சணம் இதுதான்

கமல் ஆதரித்த முதல்வரின் லட்சணம் இதுதான்

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் தமிழக ஆளும் அரசை குறை கூறுவது போல் கேரள அரசை புகழ்வதிலும் வல்லவர். கேரளாவில் இருந்து தினந்தோறும் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்பட்டு கொண்டிருப்பது குறித்து கேள்வி கேட்க தெரியாத கமல், ஓணம் பண்டிகைக்கு கேரள முதல்வரின் வீட்டுக்கே சென்று விருந்து சாப்பிடுவார் இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் தமிழகத்தை மட்டுமின்றி கேரளாவையும் பதம் பார்த்தது. ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகையில் உள்ள பணத்தை முதல்வர் பினராயி விஜயன் தனது சொந்த காரியத்திற்காக பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் ஆட்சி மீது வேறு எந்த குற்றம், குறையும் சொல்ல முடியாததால் இதனை கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா!

அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா!

சற்றுமுன், செய்திகள்
மலேசியாவில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவில் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான அஜித், விஜய் கலந்து கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளது அஜித், விஜய் இருவருக்குமே தற்போது படப்பிடிப்புகள் இல்லை. இருந்தும் இந்த விழாவில் அவர்கள் கலந்து கொள்ளாததற்கு காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் கமல், ரஜினி மற்றும் விஷாலுக்கு மட்டுமே இந்த விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால் இருவரும் கலந்து கொள்ளவிலலி என்று கூறப்படுகிறது அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா களைகட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய அரசியல் பயணம் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ செல்லவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலகினர் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, மூவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இதனை அவர் உறுதி செய்தார். இந்த விழாவில் அவர் கூறியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
கமல் வாழ்க்கையிலும் நன்றாக நடிக்கின்றார்: டிடிவி தினகரன்

கமல் வாழ்க்கையிலும் நன்றாக நடிக்கின்றார்: டிடிவி தினகரன்

சற்றுமுன், செய்திகள்
டிடிவி தினகரன் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன், ஓட்டுக்கு பணம் பெறுவது பிச்சையெடுப்பதற்கு சமம் என்று அந்த தொகுதி மக்களையும் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என கமல் நினைக்கிறார் கமல். அவர் நல்ல நடிகர், நல்ல சிந்தனையாளர் என நினைத்தேன்; ஆனால் வாழ்க்கையில் நடிக்கிறார். அவரது மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும் இதுவரை தான் கமல்ஹாசனை விமர்சனம் செய்தது இல்லை என்றும், கமல் தன்னை திருடன் என்றும், மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியதால்தான் அவரை விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்
நடிகர் சங்கத்தின் மலேசியா நட்சத்திர கலைவிழா தேதி அறிவிப்பு

நடிகர் சங்கத்தின் மலேசியா நட்சத்திர கலைவிழா தேதி அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கு நிதி திரட்ட பல்வேறு வழிகளில் நிதிதிரட்டும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் ஜனவரியில் மலேசியாவில் பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுருந்தது தெரிந்ததே. இந்த விழாவில் ரஜினி, கமல், விஜய் உள்பட கோலிவுட் திரையுலகமே திரண்டு கலைவிழாவை சிறப்பிக்கவுள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த நட்சத்திர கலைவிழா நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த தகவலை நடிகரும் நடிகர் சங்க செயலாளருமான விஷால் அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் உள்ள Bukit Jalil என்ற இடத்தில் நடைபெறவுள்ளதாக விஷால் அறிவித்துள்ளார். இந்த நட்சத்திர கலைவிழாவில் கிடைக்கும் வருமானம், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிகிறது. https://twitter.com/VishalKOfficial/status/941506335048212481
விஷாலுக்கு விசில் சின்னம் கிடைக்குமா?

விஷாலுக்கு விசில் சின்னம் கிடைக்குமா?

சற்றுமுன், செய்திகள்
ரஜினி, கமல் போல் இல்லாமல் அதிரடியாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அரசியலில் குதித்த விஷால் இன்று வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். வேட்புமனுவை தாக்கல் செய்தவுடன் நேராக ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்ற விஷால் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் விஷால் தனது வேட்புமனுவில் தனக்கு விசில் சின்னம் வேண்டும் என்று கேட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதே சின்னத்தை டிடிவி தினகரனும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் கமிஷன் இந்த சின்னத்தை யாருக்கு வழங்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார், இனியும் பொறுக்க முடியாது: கமல்

கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார், இனியும் பொறுக்க முடியாது: கமல்

சற்றுமுன், செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் டுவிட்டரில் ஆவேசமாக அரசியல் செய்து கொண்டிருக்கும் கமல், வரும் ஜனவரியில் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோவில் கொள்ளை குறித்து நேற்றிரவு கமல் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது' என்று கூறியுள்ளார். வழக்கம்போல் இந்த டுவீட்டும் பலருக்கும் புரியவில்லை என்றாலும் கோவில் கொள்ளை குறித்த டுவீட் என்று மட்டும் தெரிகிறது. மேலும் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார் என்று கூறியிருப்பது பக்கா சினிமா வசனம் என விமர்சிக்கப்படுகிறது. கமல் போன்ற தனிம
கமல் கூறிய இந்து தீவிரவாதம் இதுதானா?

கமல் கூறிய இந்து தீவிரவாதம் இதுதானா?

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ ஒன்றும், அதனையொட்டி அவர் பதிவு செய்த டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் கமல் போஸ்டரை கத்தியால் குத்தும் காட்சியும், பின்னணியில் இவன் இந்து விரோதி அவனை விடாதே' என்ற குரலும் உள்ளது. இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.< இந்த டுவீட் புரியவில்லையா? கவல
கைதை தவிர்க்க களத்தில் இறங்கினாரா கமல்?

கைதை தவிர்க்க களத்தில் இறங்கினாரா கமல்?

சற்றுமுன், செய்திகள்
நிலவேம்பு குறித்த சர்ச்சைக்குரிய டுவீட் காரணமாக கமல்ஹாசன் மீது எந்த நேரத்திலும் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் திடீரென எண்ணூர் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறை கேட்டுள்ளார். ஏற்கனவே இந்த பகுதி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நேற்று டுவிட்டரில் எச்சரித்த கமல், இன்று அந்த பகுதிக்கு சென்று கள ஆய்வு செய்துள்ளார். நிலவேம்பு விஷயத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் தான் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த கமல், மக்கள் செல்வாக்கை பெறுவதற்காக திடீரென களம் இறங்கியுள்ளதாகவும், இத்தனை நாள் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்த அவர் இன்று திடீரென களமிறங்கியதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்