குறிச்சொல்: சரத்குமார்

கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? சரத்குமார்

கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? சரத்குமார்

சற்றுமுன், தமிழகம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமல் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்க்கு ஆவேசமடைந்த அவர், கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும். வேண்டுமென்றால் அவர் என்னிடம் கூட்டணி வைக்க வரட்டும்' என்று கூறினார் தான் 22 வருடங்களாக அரசியல் கட்சி நடத்தி வருவதாகவும், மற்றவர்களை போல் தான் ரிட்டையர் ஆனவுடன் அரசியலுக்கு வரவில்லை என்றும் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவுடன் அரசியலுக்கு வந்ததாகவும் சரத்குமார் கூறினார் மேலும் தற்போதைய தமிழக அரசு நல்லமுறையில் சென்று கொண்டிருப்பதாகவும், ஒரு கட்சியின் தலைவர் மறைந்த பின்னரும் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் அமைச்சர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
சிம்ரன், தபு நடிக்க மறுத்த கேரக்டரில் ஜோதிகா

சிம்ரன், தபு நடிக்க மறுத்த கேரக்டரில் ஜோதிகா

சற்றுமுன், செய்திகள்
கடந்த 2007ஆம் ஆண்டு சரத்குமார், ஜோதிகா நடிப்பில் கவுதம்மேனன் இயக்கிய 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் ஜோதிகா நெகட்டிவ் கேரக்டரில் சூப்பராக நடித்திருந்தார். இந்த கேரக்டர் அவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்த நிலையில் தற்போது இந்த கேரக்டருக்கு ஏற்கனவே இருவரை கவுதம் மேனன் அணுகியிருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த இருவர் சிம்ரன் மற்றும் தபு ஆகியோர்கள்தான். 'சினேகிதியே' படத்தில் தபுவும், 'பார்த்தேன் ரசித்தேன்' படத்தில் சிம்ரனும் கிட்டத்தட்ட நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் இருவரும் நடிக்க மறுத்துவிட்டனர் ஆனால் படம் வெளிவந்த பின்னர் இந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இருவரும் வருத்தப்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல்

அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல்

சற்றுமுன், செய்திகள்
பிரபல நடிகை வரலட்சுமி தற்போது திரைப்படங்களில் பிசியாக இருப்பதோடு, திரையுலக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் மிக விரைவில் அவரது தந்தை சரத்குமார் போல் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இதற்கு பதலளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த 'சத்யா' திரைப்படத்தின் வெற்றி விழாவில் வரலட்சுமி பேசியதாவது: 'சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர் , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி. சேவ் சக்தி அமைப்பு விஷயமாக தான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன். என்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவி
விஷாலுடன் சேர்ந்து சரத்குமாருக்கு குடைச்சலை கொடுக்கும் ஜோதிகா

விஷாலுடன் சேர்ந்து சரத்குமாருக்கு குடைச்சலை கொடுக்கும் ஜோதிகா

சற்றுமுன், செய்திகள்
சரத்குமார் படம் ரிலீசாகிறது என்றால் எவ்வளவு பெரிய படங்கள் வெளிவந்தாலும் கணிசமான திரையரங்குகளில் அவருடைய படமும் வெளியாகி கல்லா கட்டும். ஆனால், தற்போது நிலைமை வேறு விதமாக போய்க் கொண்டிருக்கிறது. சரத்குமார் தற்போது நடித்துள்ள ‘சென்னையில் ஒருநாள் 2’  படத்திற்கு தியேட்டர் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதாவது, வருகிற 15-ந் தேதி இப்படத்தை திரையிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், அன்றைய தேதியில் விஷாலின் ‘துப்பறிவாளன்’ படமும், ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படமும் ரிலீசாகவிருப்பதால் சரத்குமாரின் ‘சென்னையில் ஒருநாள் 2’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். விஷாலின் ‘துப்பறிவாளன்’ படம் சுமார் 500 திரையரங்குகளையும், ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ சுமார் 300 திரையரங்குகளையும் ஆக்கி
நடிகர் சரத்குமார் கமல்ஹாசன் மோதல் !

நடிகர் சரத்குமார் கமல்ஹாசன் மோதல் !

சற்றுமுன், செய்திகள்
சமீப காலமாக வலைத்தளங்களில் அரசியல் பேசி பெரும் மக்கள் ஆதரவை அள்ளியுள்ளார் கமல். மக்களிடம் இவருடைய கருத்துக்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும் அரசியலை சார்ந்த யாருக்கும் கமல் கூறும் எந்த ஒரு கருத்திலும் ஈடுபாடில்லை . அவர் கூறும் ஒவ்வொன்றிற்கும் குதர்க்கமாய் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர் . கமலுக்கு அரசியில் தெரியாது என்றும், அவர் திடீரென ஏன் அரசியில் பேசுகிறார் என்றும், அவருக்கு மன நிலை சரியில்லை என்றும் அரசியல்வாதிகளிடமிருந்து பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளனர் . இதனிடையில் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத் குமார் "கமல் இத்தனை   நாட்கள் அமைதிகாத்துவிட்டு திடீரென அரசியல் பேச கரணம் என்ன? புரட்சி தலைவி அம்மா ஆட்சி  இருக்கும் போது  தமிழ்நாட்டில் ஊழல் நடப்பது அவருக்கு தெரியவில்லையா? விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டப
15 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணையும் சரத்குமார்-நெப்போலியன்

15 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணையும் சரத்குமார்-நெப்போலியன்

சற்றுமுன், செய்திகள்
சரத்குமார், நெப்போலியன் இணைந்து நடித்த 'தென்காசிபட்டணம்' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இருவரும் தனித்தனியே பல படங்களில் நடித்தாலும் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. அந்த குறை தற்போது நீங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் சரத்குமார் நடிக்கும் படம் 'சென்னையில் ஓர்நாள் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க நெப்போலியன் ஒப்பந்தமாகியுள்ளார். 15 வருடங்களுக்கு பின் இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை வசனத்தில் உருவாகும் இந்த படத்தை ஜேபிஆர் என்பவர் இயக்குகிறார். சுஹாசினி, முனிஷ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
சூர்யா உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

சூர்யா உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், அருண்விஜய், விஜயகுமார், விவேக், ஸ்ரீப்ரியா ஆகியோர்களுக்கு நீலகிரி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியானது. இந்த செய்தியில் வேண்டுமென்றே பல அருவருக்கத்தக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அந்த பத்திரிகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்கம் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் மேற்படி எட்டு நடிகர்களும் பொங்கி எழுந்தனர். ஒரு நடிகர் உச்சகட்டமாக பத்திரிகையாளர்களை கெட்ட வார்த்தை ஒன்றால் திட்டினார். இந்த நிலையில் நடிகர்களின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களின் மனம் பாதிக்கும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் இருந்த
தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக புதிய சங்கமா? அதிர்ச்சியில் விஷால்

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக புதிய சங்கமா? அதிர்ச்சியில் விஷால்

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தை போலவே சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தையும் விஷாலின் இளைஞர் அணி கைப்பற்றியது. ஆனால் நடிகர் சங்கத்தில் தோல்வி அடைந்த சரத்குமார், ராதாரவி போன்று தயாரிப்பாளர் சங்கத்தினர் சும்மா இருக்காமல் விஷாலுக்கு போட்டியாக புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். அதுதான் தமிழ் திரைப்பட வர்த்தக சபை இந்த அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் அதற்கு உயிர் கொடுத்து புதிய அமைப்பாக உருவாக்கியுள்ளனர். இதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பொறுப்பை ஏற்றவுடன் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ' 'இந்த அமைப்பு திரையுலகின் நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன் நிலைப்பாடு யாருக்கும் எதிரானது அல்ல. அரசுகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்' எ