குறிச்சொல்: சூர்யா

சூர்யா ஜோடியாக ப்ரியாவாரியர்?

சூர்யா ஜோடியாக ப்ரியாவாரியர்?

சற்றுமுன், செய்திகள்
ஒரே ஒரு கண்ணசைவு மற்றும் புருவ நடனம் ஆகியவை அடங்கிய ஒருசில வினாடி அடங்கிய வீடியோவால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ப்ரியாவாரியர். 'ஒரு ஆடார் லவ்' படத்தின் டீசர் ஏற்படுத்திய பரபரப்பு அனேகமாக வேறு எந்த பட டீசரும் ஏற்படுத்தியிருக்காது இந்த நிலையில் ப்ரியாவாரியருக்கு தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆனால் முதல் படம் ரிலீஸ் ஆன பின்னர்தான் அவர் அடுத்த படத்தில் ஒப்பந்தமாக முடியும் என்ற நிலை அவருக்கு உள்ளதாம் இந்த நிலையில் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் ப்ரியா வாரியரை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை முடியுந்தாருவாயில் இருப்பதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தோல்வியை மறைக்க கார் பரிசா? சூர்யா மீது விநியோகிஸ்தர்கள் புகார்

தோல்வியை மறைக்க கார் பரிசா? சூர்யா மீது விநியோகிஸ்தர்கள் புகார்

சற்றுமுன்
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த நடிகர் சூர்யா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சிகப்பு நிற கார் பரிசளித்துள்ளதுதான் இன்றைய ஹாட் டாக். ஆனால் இந்த பரிசு விநியோகிஸ்தர்களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்படி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ.36 கோடிக்கு பிசினஸ் ஆனதாகவும், ஆனால் இந்த படம் ரூ.20 கோடி மட்டுமே வசூலானதால் விநியோகிஸ்தர்களுக்கு ரூ.16 கோடி நஷ்டம் என்றும் கூறப்படுகிறது. நஷ்டத்தை மறைக்கவே சூர்யா, இயக்குனருக்கு கார் பரிசளித்துள்ளதாகவும் இது தங்களை அவமதிக்க்கும் வகையில் இருப்பதாகாவும் விநியோகிஸ்தர்கள் புகார் கூறியுள்ளனர்.
சூர்யாவின் NGK டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

சூர்யாவின் NGK டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

சற்றுமுன், செய்திகள்
சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் படத்திற்கு NGK என்ற டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த டைட்டிலுக்கு என்ன விரிவாக்கம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. NGK என்றால் நந்த கோபாலன் குமாரன் என்று அர்த்தமாம். இதை படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன் அறிவிக்க திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் இந்த விஷயம் நேற்றே கசிந்துவிட்டது படக்குழுவினர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  
மீண்டும் இணைகிறதா சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி?

மீண்டும் இணைகிறதா சூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணி?

சற்றுமுன், செய்திகள்
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' ரசிகர்களின் மாபெரும் பெற்றதோடு, 50 நாட்கள் என்ற மைல்கல்லையும் திரையரங்குகளில் பெற்றது. பெரும் நட்சத்திர கூட்டம், விறுவிறுப்பான திரைக்கதை, அனிருத்தின் இசை ஆகியவை இந்த படத்தின் பலம் ஆகும் இந்த நிலையில் சமீபத்தில் நடந்த டுவிட்டர் உரையாடலில் சூர்யாவும், விக்னேஷ் சிவனும் மீண்டும் இணையவுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த முறை ரீமேக் படமாக இல்லாமல் விக்னேஷ் சிவனின் ஒரிஜினல் ஸ்கிரிப்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் பிசியாக உள்ளார். இருவரும் தங்களின் தற்போதைய பணிகளை முடித்தவுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சூர்யாவுக்கு தானா சேர்ந்த 4 மில்லியன் கூட்டம்

சூர்யாவுக்கு தானா சேர்ந்த 4 மில்லியன் கூட்டம்

சற்றுமுன், செய்திகள்
அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் சூர்யாவுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, கேரள மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிக்கும் அடுத்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா இயக்கவுள்ளார் இந்த நிலையில் சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் இணைந்துள்ளனர். தானா சேர்ந்த இந்த 4 மில்லியன் ஃபாலோயர்களுக்கு சூர்யா தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.
ஆக்சனுக்கு அஜித்! அப்ப விஜய், சூர்யாவுக்கு என்ன? நிக்கி கல்ராணி

ஆக்சனுக்கு அஜித்! அப்ப விஜய், சூர்யாவுக்கு என்ன? நிக்கி கல்ராணி

சற்றுமுன், செய்திகள்
தமிழ் திரையுலகில் 'டார்லிங்' படத்தில் அறிமுகமாகி இன்று நம்பர் ஒன் இடத்தை நோக்கி விரைந்து முன்னேறி கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் சிறந்த ஆக்சன் ஹீரோ என்னை பொருத்தவரையில் அஜித் தான் என்றும், விஜய் மற்றும் சூர்யா எமோஷனல் காட்சிகளில் நடிப்பதில் சிறந்தவர்கள் என்றும் கூறியுள்ளார் மேலும் ஜாலியான கேரக்டர்களில் நடிக்க பல நடிகர்கள் இருந்தாலும் சிவகார்த்திகேயனை இந்த விஷயத்தில் முந்த ஆள் இல்லை' என்றும் நிக்கி கல்ராணி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
அஜித், விஜய், சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்

அஜித், விஜய், சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட் திரையுலகில் வெறும் 12 படங்கள் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன், கடந்த 25 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் அஜித், விஜய்க்கும்,மற்றும் சூர்யாவுக்கு சவால் கொடுக்கும் வகையில் வளர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.86 கோடி வசூல் செய்து விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கணிசமான லாபத்தை கொடுத்துள்ளது. அஜித், விஜய், சூர்யா, ஆக்சனை மட்டும் நம்பியிராமல் வித்தியாசமான கதையை தேர்வு செய்யாவிட்டால் மிக விரைவில் இவர்களை சிவகார்த்திகேயன் முந்துவது உறுதி என்றே கிசுகிசுக்கப்படுகிறது.
ஏன் இப்படி செஞ்சீங்க ?- சூர்யா படக்குழுவுக்கு சுரேஷ் மேனன் கேள்வி

ஏன் இப்படி செஞ்சீங்க ?- சூர்யா படக்குழுவுக்கு சுரேஷ் மேனன் கேள்வி

சற்றுமுன், செய்திகள்
  பொங்கல் அன்று வெளியான படங்களில் தானா சேர்ந்த கூட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சூர்யா நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் நடித்துள்ளார்.இந்த படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றுள்ளது. ஆனால் சுரேஷ் மேனன் இந்த படக்குழுவினர் மீது மன வருத்தத்தில் உள்ளார். காரணம் அவரது குரலுக்கு பதில் டப்பிங் வாய்ஸ் பயன்படுத்தியதே. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் தனது வருத்ததை தெரிவித்துள்ளர். அவர் கூறியதவது:- இந்த படத்தில் முழுக்க முழுக்க நான் டப்பிங் பேசிகொடுத்துள்ளேன் ,ஆனால் படத்தில் என்னுடைய குரலை நீக்கிவிட்டு இயக்குனர் கௌதம் மேனன் குரலை வைத்துள்ளார்கள். ஏன் என் குரல் நன்றாகத்தானே இருக்கிறது. பிறகு ஏன் அதை மாற்றினார்கள்? என்று கூறியுள்ளார். மேலும் அவரின் சொந்த குரலில் பேசி நடித்துள்ள ஒரு வீடிய
சூர்யாவுக்கு ஆதரவு தருவது சரிதா! ஆனால்…வித்யூலேகா கூறுவது என்ன?

சூர்யாவுக்கு ஆதரவு தருவது சரிதா! ஆனால்…வித்யூலேகா கூறுவது என்ன?

சற்றுமுன், செய்திகள்
சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த இரண்டு ஆர்ஜேக்களுக்கு எதிராக இன்று பொங்கிய சூர்யாவின் ரசிகர்கள் சன் டிவி முன் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர் இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ள நகைச்சுவை நடிகை வித்யூலேகா, 'சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பது குறித்து மகிழ்ச்சி தான் ஆனால் அதே நேரத்தில் பெண்களுக்கும் இதுபோன்ற அவமதிப்பு ஏற்படும்போது அவர்கள் ஆதரவு தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதோ அவரது டுவீட் https://twitter.com/VidyuRaman/status/954421594805293056
சூர்யா படத்தில் அமிதாப் இல்லையாம்! அப்ப ஸ்டூல் தேவைப்படாது?

சூர்யா படத்தில் அமிதாப் இல்லையாம்! அப்ப ஸ்டூல் தேவைப்படாது?

சற்றுமுன், செய்திகள்
சூர்யாவின் படத்தில் அமிதாப் நடித்தால் சூர்யா ஸ்டூல் போட்டுத்தான் நடிக்க வேண்டும் என்று இரண்டு விஜெக்கள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சூர்யா படத்தில் அமிதாப் ஒப்பந்தம் செய்யப்பட மாட்டார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி வெளியானது சமூக வலைத்தளங்களில் பலர் நல்லவேளை அப்ப இனி ஸ்டுல் தேவைப்படாது என்று பதிவு செய்து வருகின்றனர். மேலும் சூர்யா-செல்வராகவன் படத்தின் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது