குறிச்சொல்: செட்

விஷாலின் சண்டைக்கோழி 2 ; ரூ.6 கோடி செலவில் பிரம்மாண்ட செட்

விஷாலின் சண்டைக்கோழி 2 ; ரூ.6 கோடி செலவில் பிரம்மாண்ட செட்

Uncategorized
இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்க இருக்கும் சண்டைக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டைக் கோழி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் லிங்குசாமி இறங்கினார். நடுவில் சில தடங்கல்கள் ஏற்பட்டதால், அந்த புராஜெக்ட் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில், விஷால் நடிக்க உள்ள அப்படத்திற்கான வேலை தற்போது துவங்கியுள்ளது.  அதற்காக சென்னையில் உள்ள பின்னி மில்லில் ரூ.6 கோடி செலவில் மதுரை போன்று ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.  அப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. விஷாலுக்கு இப்படம் 25வது படம் ஆகும்.. இப்படத்தை விஷாலின் ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனமே தயாரிக்கிறது.    
ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் மும்பை தாராவி போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட் பணி முடிவடைந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று செட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் போது ஏணி ஒன்றை ஊழியர் ஒருவர் தூக்கி கொண்டு வந்தார். அப்போது அவர் நடந்து வந்த பாதையில் இருந்த மின்வயரை மிதித்தார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் படக்குழுவினர்களும் செட் அமைக்கும் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பலியான ஊழியர் பெயர் மைக்கேல் என்பதும் அவருடைய மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.