குறிச்சொல்: டிவிட்டர்

ராஜினாமா செய்யுங்கள் – அரசுக்கு எதிராக பொங்கியெழுந்த கமல்ஹாசன்

ராஜினாமா செய்யுங்கள் – அரசுக்கு எதிராக பொங்கியெழுந்த கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
  நாட்டில் இவ்வளவு ஊழல் நடக்கும் போதும், அதை சரி செய்யாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அரசுக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஊழல், நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் பற்றி சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மூன்று கருத்துகளை ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார்.முதலில், தமிழகத்தில் ஊழல், கோர சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சியும் அவரின் ராஜினாமாவை கோராதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்த டிவிட்டில் “ சிறந்த தமிழகத்தை உருவாக்குவதுதான் என் நோக்கம். என்னுடைய குரலுக்கு வலிமை சேர்ப்பதற்கு யாருக்கு தைரியம் இருக்கிறது? அதிம
ஓவியாவை திருமணம் செய்வதாக வெளியான செய்தி – சிம்பு விளக்கம்

ஓவியாவை திருமணம் செய்வதாக வெளியான செய்தி – சிம்பு விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியாவை, நடிகர் சிம்பு, தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது. அதுவும் அவரின் பெயரில் இருந்த கணக்கிலிருந்தே இந்த செய்தி வெளியானது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால், முற்றிலும் தவறானது என சிம்பு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு அவர் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ''எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக  அக்கௌன்ட் மூலம்  இது
ஓவியா விரும்பினால் இது நடக்கும்: பிரபல இயக்குனர் கருத்து

ஓவியா விரும்பினால் இது நடக்கும்: பிரபல இயக்குனர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
தான் இயக்கும் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புகிறேன் என இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாவை வைத்து அமுதன் இயக்கிய படம் ‘தமிழ் படம்’. தமிழ் சினிமா ஹீரோக்களையும், தமிழ் சினிமாவில் உள்ள அபத்தமான காட்சிகளையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட அந்தப் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பின் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை அமுதன் இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் அடுத்து தமிழ் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதிலும், நடிகர் சிவாவே நடிப்பார் எனத் தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “ தமிழ் படத்தின் 2ம் பாகத்தில், ஓவியாவை நடிக்க வைக்க வேண்டு
சுச்சிலீக்ஸ் : பிரபல நடிகையின் பெயரில் ஆபாச வீடியோ

சுச்சிலீக்ஸ் : பிரபல நடிகையின் பெயரில் ஆபாச வீடியோ

சற்றுமுன், செய்திகள்
பிரபல பின்னணிப் பாடகி சுசித்ராவின் பெயரில் உள்ள சுச்சிலீக்ஸ் டிவிட்டர் பக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையின் பெயரில் ஒரு ஆபாச வீடியோ வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்திலிருந்து நடிகர் தனுஷ், த்ரிஷா உள்ளிட்ட சிலரின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தன்னுடைய டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வருவதாக சுசித்ரா புகார் அளித்தார். அதன் பின் அவரின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதன் பின் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டிவிட்டரில் உலவி வருகிறது. இந்நிலையில், ஒருநாள் ஒரு கூத்து படத்தில் நடித்த நிவேதா பெத்துராஜின் பெயரில், சுச்சிலீக்ஸ் பக்கத்தில் ஒரு ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சினிமா உலகில் அதிர்ச்சியை
பிரபாஸும் ராணாவும் எனக்கு ஈடு கிடையாது – நடிகர் திமிர் பேச்சு

பிரபாஸும் ராணாவும் எனக்கு ஈடு கிடையாது – நடிகர் திமிர் பேச்சு

சற்றுமுன், செய்திகள்
எப்போதும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துவரும் பாலிவுட் நடிகரும், சினிமா விமர்சகருமான கமால்கான் தற்போது பாகுபலி நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா ரகுபதி ஆகியோர் பற்றி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமால்கன், சமீப காலமாக நடிகர்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றி சர்ச்சையான கருத்துகளை பதிவு செய்து வருகிறர். சமீபத்தில் மோகன்லாலை பற்றி விமர்சித்து கேரள ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பின் அதற்கான மன்னிப்பு கேட்டார். அதன் பின் அவரின் பார்வை சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் பாகுபலி படம் மீது திரும்பியது. அது ஒரு குப்பைப் படம் என வெளிப்படையாக விமர்சித்தார். அந்நிலையில், அவரின் டிவிட்டர் கணக்கை பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா ரகுபதி, அவரின் கணக்கிலிருந்து ப்ளாக் செய்தார். இதனால் கோபமடைந்த கமால் கான் “நான் இந்த முட்டாளை (ராணா) பின் தொடரவும் இல்லை, இ
ராணா ரகுபதி மூளை இல்லாதவர் : நடிகர் சர்ச்சை பேச்சு

ராணா ரகுபதி மூளை இல்லாதவர் : நடிகர் சர்ச்சை பேச்சு

சற்றுமுன், செய்திகள்
சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துவரும் பாலிவுட் நடிகர் கமால்கான், தற்போது பாகுபலி நடிகர்கள் ராணா ரகுபதி மற்றும் பிரபாஸ் பற்றி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமால்கன், சமீப காலமாக நடிகர்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றி சர்ச்சையான கருத்துகளை பதிவு செய்து வருகிறர். சமீபத்தில் மோகன்லாலை பற்றி விமர்சித்து கேரள ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பின் அதற்கான மன்னிப்பு கேட்டார். அதன் பின் அவரின் பார்வை சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் பாகுபலி படம் மீது திரும்பியது. அது ஒரு குப்பைப் படம் என விமர்சித்தார். அந்நிலையில், அவரின் டிவிட்டர் கணக்கை பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா ரகுபதி, அவரின் கணக்கிலிருந்து ப்ளாக் செய்தார். இதனால் கோபமடைந்த கமால் கான் “நான் இந்த முட்டாளை (ராணா) பின் தொடரவும் இல்லை, இதுவரை எந்த ஒரு தவறான கருத்துகளையும் பதிவு செய்ததில்
ஷங்கரின் 2.0 ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு – காரணம் என்ன?

ஷங்கரின் 2.0 ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு – காரணம் என்ன?

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 2.0. இந்த படம் பல கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் வில்லனாக பாலிவுட நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் வருகிற தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தொழில் நுட்ப காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்‌ஷனை சேர்ந்த ராஜூ மஹாலிங்கம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “உலக தரமான தொழில்நுட்ப வேலைகளை செய்ய வேண்டியிருப்பதால் (வி.எஃப்.எக்ஸ்) தீபாவளிக்கு வெளியாக இருந்த 2.0 படம், ஜனவரி 25ம் தேதி 2018ல் வெளியாக உள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பாகங்களாக வெளியாகிறதா சிம்புவின் ஏஏஏ படம் ?

இரண்டு பாகங்களாக வெளியாகிறதா சிம்புவின் ஏஏஏ படம் ?

சற்றுமுன், செய்திகள்
சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் 2 பாகங்களாக வெளிவர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு மொத்தம் 3 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இதில் மதுரை மைக்கேல் என்கிற தோற்றத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. அடுத்து அஸ்வின் தாத்தா என்கிற கதாபாத்திரத்திற்கான காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. அது இல்லாமல் இன்னொரு கெட்டப்பும் சிம்புவிற்கு இருக்கிறது. இந்நிலையில், சிம்பு தனது டிவிட்டர் பக்கதில் “ஏஏஏ 1 டைமன்ஷன் 2017 ஜூன் ரம்ஜான் முதல்.. ஒரு மாற்றத்தினால் தாமதம் என்பதுதுதான் புதிய தகவல்” எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படி எனில், ஏஏஏ படம் இரண்டு பாகங்களாக வெளிவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிம்புதான் பதிலளிக்க வேண்டும்.
இந்த படத்தை பார்த்து ஷாக் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்..

இந்த படத்தை பார்த்து ஷாக் ஆன ஐஸ்வர்யா ராஜேஷ்..

சற்றுமுன், செய்திகள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. காக்கா முட்டை படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின் அவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் மலையாள நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சகாவு படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அப்படத்தின் புரோமோஷன் தொடர்பான சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் கேரளாவில் இருந்து காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையோரத்தில் இருந்த ஒரு விளம்பர பேனரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே காரை நிறுத்தி, அதை புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கேரளாவில் பார்த்தேன். இந்த பெண் அப்படியே
வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வந்த வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. அதன் பின் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அவரும் அப்படத்திலிருந்து விலகினார். அந்நிலையில், நடிகர் தனுஷ் பவர்பாண்டி படத்தை இயக்க சென்று விட்டார். மேலும், வேலை இல்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்திலும் அவர் நடித்துக் கொண்டிருந்தார். எனவே, வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது பவர்பாண்டி படம் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், வேலை இல்லா பட்டதாரி 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் ம