குறிச்சொல்: டுவிட்டர்

போடா லூசு, குஷ்புவிடம் திட்டு வாங்கிய அந்த குமாரு யாரு?

போடா லூசு, குஷ்புவிடம் திட்டு வாங்கிய அந்த குமாரு யாரு?

சற்றுமுன், செய்திகள்
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, டுவிட்டரில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. கட்சியின் கொள்கை மட்டுமின்றி பலவித கருத்துக்களை நாகரீகமாக தெரிவித்து வருபவர் இந்த நிலையில் இன்று திடீரென எல்லை மீறி ஒருவரை பயங்கரமாக குஷ்பு தனது டுவிட்டரில் திட்டியுள்ளார். ஒருத்தன் ரொம்ப படுத்துறான்..டேய் நீ தலை கீழே நின்னாலும் நீ ஒரு லூசுதான்...வாழ்க்கையிலே ஜெயிக்கிறதுக்கு 'தீயா வேலை செய்யணும் 'குமாரு'...வெறும் ஜால்ரா அடிச்சு கூஜா தூக்குனா நீ வெளங்குன மாதிரிதான்...போடா.. ஏதாவது வேலை பாரு...சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை' என்று கொந்தளித்துள்ளார் குஷ்புவிடம் திட்டுவாங்கிய அந்த குமாரு என்ற நபர் யார் என்று கேட்டதற்கு ''அந்த லூசு ஆளு பற்றி சொல்லும் அளவுக்கு வொர்த் இல்லை. சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை என்று நான் சொன்னது அந்த ஆளுக்கு புரிந்திருக்கும்' என்று பதிலளித்த
முழுசா ‘அருவி’யாகவே மாறிய ஜெயம் ரவி

முழுசா ‘அருவி’யாகவே மாறிய ஜெயம் ரவி

சற்றுமுன், செய்திகள்
இந்த ஆண்டின் சிறந்த படம் மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ள் 'அருவி' படத்தை கோலிவுட் திரையுலகினர் எந்தவித பேதமும், ஈகோவும் இல்லாமல் கொண்டாடி வருகின்றனர். ஷங்கர், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்பட பலரும் தங்களது டுவிட்டரில் 'அருவி' படத்தை பாராட்டி வரும் நிலையில் ஜெயம் ரவி தனது டுவிட்டரில் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் பாராட்டியுள்ளார். அதாவது தனது டுவிட்டரில் புரொபைல் புகைப்படத்தை அருவி படத்தின் போஸ்டராக மாற்றி தனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜெயம்ரவி. https://twitter.com/actor_jayamravi/status/942840224840683520?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F149086
ஓவியாவிடம் கேள்வி கேட்க தயாராகுங்கள் ரசிகர்களே!

ஓவியாவிடம் கேள்வி கேட்க தயாராகுங்கள் ரசிகர்களே!

சற்றுமுன், செய்திகள்
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கன்னாபின்னா என்று பிரபலம் ஆனது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவரது பெயரில் ஓவியா படை, ஓவியா ஆர்மி என்று ஆரம்பிக்கப்பட்டு டுவிட்டரே பரபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஓவியா அறிவித்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி இரவு 8 மணிக்கு #AskOviyaSweetz என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் இந்த ஒரே ஒரு டுவிட்டுக்கு 16 ஆயிரம் லைக்ஸ்களும், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரீடுவீட்டுக்களும் கிடைத்துள்ளன. முன்னணி நடிகர்களின் டுவீட்டுகளுக்கு கூட இந்த அளவு வரவேற்பு கிடைத்திருக்குமா? என்பது கேள்விக்குறியே
ரஜினிக்கு இரவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்

ரஜினிக்கு இரவில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரை பாராட்டாத விஐபிக்களே இல்லை என்று கூறலாம் பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமிதாப்பச்சன், ஷாருக்கான், உள்பட பலர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர் இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல்ஹாசன் நேற்று பகல் முழுவதும் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்தது கமல், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்தது இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் கமல் தனது டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து டுவீட்டில் கூறியதாவது: சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம் 2 வேலையாக. அமேரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். கமல்
இனிதே முடிந்தது திருமணம்: விராத் கோஹ்லி-அனுஷ்கா அறிவிப்பு

இனிதே முடிந்தது திருமணம்: விராத் கோஹ்லி-அனுஷ்கா அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் சற்றுமுன்னர் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் இனிதே முடிந்ததாக விராத் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது நண்பர்கள் மற்றும் கோஹ்லி - அனுஷ்கா தரப்புக்கு நெருக்கமான நபர்கள் முன் இந்த திருமணம் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே விராத்-அனுஷ்கா இருவரும் காதலித்து வந்த நிலையில் இடையில் ஒரு சிறு ஊடல் ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.
கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார், இனியும் பொறுக்க முடியாது: கமல்

கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார், இனியும் பொறுக்க முடியாது: கமல்

சற்றுமுன், செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் டுவிட்டரில் ஆவேசமாக அரசியல் செய்து கொண்டிருக்கும் கமல், வரும் ஜனவரியில் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோவில் கொள்ளை குறித்து நேற்றிரவு கமல் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் 'கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது' என்று கூறியுள்ளார். வழக்கம்போல் இந்த டுவீட்டும் பலருக்கும் புரியவில்லை என்றாலும் கோவில் கொள்ளை குறித்த டுவீட் என்று மட்டும் தெரிகிறது. மேலும் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார் என்று கூறியிருப்பது பக்கா சினிமா வசனம் என விமர்சிக்கப்படுகிறது. கமல் போன்ற தனிம
கமல் கூறிய இந்து தீவிரவாதம் இதுதானா?

கமல் கூறிய இந்து தீவிரவாதம் இதுதானா?

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ ஒன்றும், அதனையொட்டி அவர் பதிவு செய்த டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் கமல் போஸ்டரை கத்தியால் குத்தும் காட்சியும், பின்னணியில் இவன் இந்து விரோதி அவனை விடாதே' என்ற குரலும் உள்ளது. இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.< இந்த டுவீட் புரியவில்லையா? கவல
டுவிட்டருடன் டை-அப் செய்து கொண்டது ‘மெர்சல்’

டுவிட்டருடன் டை-அப் செய்து கொண்டது ‘மெர்சல்’

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படம் குறித்து தினந்தோறும் பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு தயாராக இருங்கள் விஜய் ரசிகர்களே என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம் இந்த நிலையில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டருடன் 'மெர்சல் படக்குழுவினர் டை-அப் செய்து கொண்டு விஜய் படத்துடன் கூடிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஒரு திரைப்படத்திற்காக டுவிட்டர் எமோஜி வெளியிடுவது தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் இதுதான் முதல்முறை. டுவிட்டர் பயனாளிகள் தாங்கள் டுவீட் செய்யும்போது #mersal என்று டைப் செய்தாலே இந்த எமோஜி தானாக தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மதியம் 2 மணிக்கு தயாராக இருங்கள் விஜய் ரசிகர்களே!

இன்று மதியம் 2 மணிக்கு தயாராக இருங்கள் விஜய் ரசிகர்களே!

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான நிமிடம் முதல் விஜய் ரசிகர்கள் மதியம் 2 மணியை நோக்கி காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். கடந்த சில நாட்களாகவே அஜித்தின் 'விவேகம்' மற்றூம் விஜய்யின் 'மெர்சல் ஆகிய படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. நேற்று அதிகாலை 12.01 மணிக்கு அஜித்தின் விவேகம் டிரைலர் வெளியாகிய இன்று 'மெர்சல்' குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
கமல் டுவீட்டுக்கு முதல்முறையாக கிளம்பிய எதிர்ப்பு

கமல் டுவீட்டுக்கு முதல்முறையாக கிளம்பிய எதிர்ப்பு

சற்றுமுன், செய்திகள்
உலகநாயகன் கமல்ஹாசனின் டுவீட் என்றால் கட்சி சாராத அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் கருத்தாழம் இருக்கும் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் தமிழக அரசை நேரடியாக எதிர்க்க தொடங்கியவுடன் அவரது டுவீட்டுகளில் அனல் பறந்தது. ஆனால் எந்த கட்சியையும் சாராமல் டுவீட் செய்து கொண்டிருந்த கமல், திடீரென திமுக ஆதரவு பத்திரிகையான 'முரசொலி' பவளவிழாவில் கலந்து கொண்டதும், அதில் தற்காப்பு, தன்மானம் என ரஜினியை மறைமுகமாக தாக்கியதும் அனைவரையும் நெருடல் அடைய செய்தது. இந்த நிலையில் நேற்றிரவு 'நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்' என்று கமல் டுவிட்டரில் கூறியுள்ளார். இதே கமல்ஹாசன் தான் கடந்த மாதம் 'பள்ளிப் படிப்பை கூட முடிக்காத எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை' என்று டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அப்படியி