குறிச்சொல்: தகவல்

கார்த்திக் நரேன் படத்தில் மீசைய முறுக்கு நாயகி….

கார்த்திக் நரேன் படத்தில் மீசைய முறுக்கு நாயகி….

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது இயக்கி வரும்  ‘நரகாசுரன்’ படத்தில், கதாநாயகியாக ‘மீசையை முறுக்கு’ படத்தில் நடித்த ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘துருவங்கள் 16’ படம் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து அவர் நரகாசுரன் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிருஷ்ணன், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆனால், கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது இதுவரை உறுதியாகாமல் இருந்தது. தற்போது அந்த வேடத்தில் ‘மீசையை முறுக்கு’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆத்மிகா இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை கார்த்திக் நரேன் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும், செப்.16ம் தேதி படப்பிடிப்பு தொடங்க இருப்பத
விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த பட அறிவிப்பு…

விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த பட அறிவிப்பு…

சற்றுமுன், செய்திகள்
விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் விக்ரம் வேதா. இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், பல கோடி வசூலையும் வாரி குவித்துள்ளது. இப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோரின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. வெளியான அனைத்து திரையரங்கிலும் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கணவன் மனைவி ஆவர். இவர்கள் நடிகர் ஆர்யாவை வைத்து  ‘ஓரம்போ’படத்தை இயக்கினர். அதன் பின் மிர்சி சிவாவை வைத்து ‘குவாட்டர் கட்டிங்’ என்ற படத்தை இயக்கினர். அதன் பின் 7 வருடங்கள் கழித்து தற்போது விக்ரம் வேதா படத்தை இயக்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களின் அடுத்த படம் குறித்து சில தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமே அடுத்த படத
ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த விஷால் – எதற்கு தெரியுமா?

ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த விஷால் – எதற்கு தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
தியேட்டர்களில் திருட்டுத்தனமாக மொபைல் போனில் படம் பிடிப்பவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் அறிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் நின்று செயலாளராக வெற்றி பெற்ற நடிகர் விஷால், சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே, திருட்டு விசிடிக்களை அழிப்பதுதான் முதல் வேலை எனக்கூறினார். இந்நிலையில் ‘விளையாட்டு ஆரம்பம்’ என்ற படத்தி இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டர். அந்த விழாவில் அவர் பேசிய போது “தியேட்டரில் செல்போன் மூலம் படத்தை படம் பிடிப்பவர்கள் பற்றி யாராவது தகவல் கொடுத்தாலோ, திருட்டு விசிடி தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்ய உறுதுணையாக இருந்தாலோ, அவர்களுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். திருட்டு விசிடி
இரண்டு பாகங்களாக வெளியாகிறதா சிம்புவின் ஏஏஏ படம் ?

இரண்டு பாகங்களாக வெளியாகிறதா சிம்புவின் ஏஏஏ படம் ?

சற்றுமுன், செய்திகள்
சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் 2 பாகங்களாக வெளிவர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு மொத்தம் 3 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இதில் மதுரை மைக்கேல் என்கிற தோற்றத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. அடுத்து அஸ்வின் தாத்தா என்கிற கதாபாத்திரத்திற்கான காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. அது இல்லாமல் இன்னொரு கெட்டப்பும் சிம்புவிற்கு இருக்கிறது. இந்நிலையில், சிம்பு தனது டிவிட்டர் பக்கதில் “ஏஏஏ 1 டைமன்ஷன் 2017 ஜூன் ரம்ஜான் முதல்.. ஒரு மாற்றத்தினால் தாமதம் என்பதுதுதான் புதிய தகவல்” எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படி எனில், ஏஏஏ படம் இரண்டு பாகங்களாக வெளிவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிம்புதான் பதிலளிக்க வேண்டும்.
விவேகம் படத்தில் தல அஜீத்தின் ரோல்… வெளிவராத தகவல்…

விவேகம் படத்தில் தல அஜீத்தின் ரோல்… வெளிவராத தகவல்…

சற்றுமுன், செய்திகள்
நடிகர் அஜீத் நடிக்கும் விவேகம் படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றி சில முக்கிய விஷயங்கள் வெளியே கசிந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் சிவா, அஜீத்தின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். சமீபத்தில் கூட கருப்பு நிற டீ-சர்ட் அணிந்த படி ஒரு புகைப்படம் வெளியானது. அதன்படி அவர் ஒரு ரகசிய உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அஜீத்தின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடும் பல்கேரியன் போலீஸ் அதிகாரியாக அவர் நடிப்பது தெரிய வந்துள்ளது. எனவே, அப்படத்தின் வில்லனாக நடிக்கும் விவேக் ஓபராய் தீவிரவாத தலைவனாக நடிப்பார் எனத் தெரிகிறது. இந்திய நாட்டை சேர்ந்த ஒருவர் பல்கேரியன் நாட்டு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் எனில், அஜீத் அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு இந்தியராக இருக்க வேண்டும். மேலும்,
வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வந்த வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. அதன் பின் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அவரும் அப்படத்திலிருந்து விலகினார். அந்நிலையில், நடிகர் தனுஷ் பவர்பாண்டி படத்தை இயக்க சென்று விட்டார். மேலும், வேலை இல்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்திலும் அவர் நடித்துக் கொண்டிருந்தார். எனவே, வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது பவர்பாண்டி படம் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், வேலை இல்லா பட்டதாரி 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் ம