குறிச்சொல்: தொடக்கம்

வேட்டை நாய் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் ஆர்.கே.சுரேஷ்..

வேட்டை நாய் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் ஆர்.கே.சுரேஷ்..

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.கே.சுரேஷை, இயக்குனர் பாலா, தாரைப்பட்டை படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது தனிமுகம், பில்லா பாண்டி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அப்புக்குட்டியை வைத்து ‘மன்னாரு’ படத்தை இயக்கிய எஸ்.ஜெய்சங்கர், சமீபத்தில் சுரேஷை சந்தித்து ஒரு கதையை சொல்ல முயன்றுள்ளார். அப்போது, தற்போது கால்ஷீட் இல்லை, ஆர்வம் இல்லை என பல்வேறு காரணங்கள் கூறி தவிர்க்க முயன்றுள்ளார். ஆனால், கதையை கேட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள் எனக் கூறி, அவரிடம் கதையை கூறியுள்ளார் ஜெய்சங்கர். முழுக்கதையையும் கேட்டவுடன், படப்பிடிப்பிற்கு எப்போது செல்லலாம் என ஆர்வமாக கேட்டாராம் சுரேஷ். அந்த அளவிற்கு அ
விஸ்வரூபம் 2 – விரைவில்….கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி….

விஸ்வரூபம் 2 – விரைவில்….கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி….

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் நடித்து கிடப்பில் போடப்பட்ட விஸ்வரூபம் 2 படத்தின் வேலைகள் மீண்டும் நடைபெறவுள்ளது. கமல்ஹாசன் எடுத்த விஸ்வரூபம் படம் முஸ்லீம்களுக்கு எதிரானது எனக் கூறி அதை வெளியிட பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டது. நீதிமன்றமும் தடை விதித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத கமல்ஹாசன், நாட்டை விட்டே வெளியேறுவேன் எனக் கூறி சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின், ஒரு வழியாக அப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதனையடுத்து, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விஸ்வரூபம்-2 தயாரானது. அந்தப் படத்தையும் கமல்ஹாசனே இயக்கினார். படம் ஏறக்குறையை முடிவடையும் வேலையில் அந்த படத்தின் வேலை நிறுத்தப்பட்டது. அதன் பின் கமல்ஹாசன் பாபநாசம், தூங்காவனம், உத்த வில்லன் ஆகிய படங்களில் நடித்தார். எனவே, விஸ்வரூபம் 2 வெளியாகுமா? வெளியாகாதா என கமல் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். இந்நிலையில் இந்த படத்தின்
வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வந்த வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. அதன் பின் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அவரும் அப்படத்திலிருந்து விலகினார். அந்நிலையில், நடிகர் தனுஷ் பவர்பாண்டி படத்தை இயக்க சென்று விட்டார். மேலும், வேலை இல்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்திலும் அவர் நடித்துக் கொண்டிருந்தார். எனவே, வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது பவர்பாண்டி படம் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், வேலை இல்லா பட்டதாரி 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் ம