குறிச்சொல்: நடிகை ஓவியா

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஓவியா போட்ட முதல் டிவிட்….

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஓவியா போட்ட முதல் டிவிட்….

சற்றுமுன், செய்திகள்
ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தானாகவே வெளியேறினார் ஓவியா.அதன் பின் அவர் தன்னுடைய சொந்த ஊரான கொச்சினுக்கு சென்று விட்டார். தன் தலை முடியையை வெட்டிக்கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் தனது ரசிகர்களுக்காக ஒரு டிவிட் செய்துள்ளார். அதில் “என் மீது நீங்கள் காட்டிய அன்பையும், அக்கறையையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.  
ஓவியா விரும்பினால் இது நடக்கும்: பிரபல இயக்குனர் கருத்து

ஓவியா விரும்பினால் இது நடக்கும்: பிரபல இயக்குனர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
தான் இயக்கும் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புகிறேன் என இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாவை வைத்து அமுதன் இயக்கிய படம் ‘தமிழ் படம்’. தமிழ் சினிமா ஹீரோக்களையும், தமிழ் சினிமாவில் உள்ள அபத்தமான காட்சிகளையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட அந்தப் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பின் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை அமுதன் இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் அடுத்து தமிழ் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதிலும், நடிகர் சிவாவே நடிப்பார் எனத் தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “ தமிழ் படத்தின் 2ம் பாகத்தில், ஓவியாவை நடிக்க வைக்க வேண்டு