குறிச்சொல்: பிரபாஸ்

ரஜினியை நெருங்க முடியாத பாகுபலி 2

ரஜினியை நெருங்க முடியாத பாகுபலி 2

சற்றுமுன், செய்திகள்
இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படைத்த படம் பாகுபலி 2. பிரபாஸ்,அனுஷ்கா,தமன்னா மற்றும் சத்யராஜ் நடித்த இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கினார். இது போல் ஒரு படம் இனி இந்தியாவில் வருவதே கடினம் என்று பலராலும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சுமார் ரூ.1700 கோடிவரை வசூலித்து மற்ற படங்கள் நெருங்க முடியாத இடத்தை பிடித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் பாகுபலி 2 ஒரு நாட்டில் மட்டும் வசூலில் பின் தங்கியது. ஆம். ஜப்பான் நாட்டில் இந்த படம் டிசம்பர் 29ம் தேதி வெளியானது. அங்குள்ள திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாலும் இப்படம் இதுவரை 5.50 லட்சம் யுஎஸ் டாலர்களை மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் வெளியான ரஜினியின் முத்து 15 லட்சம் யுஎஸ் டாலர்கள் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லியிடம் அடுத்ததாக சிக்குவது ‘பாகுபலி ‘பிரபாஸா?

அட்லியிடம் அடுத்ததாக சிக்குவது ‘பாகுபலி ‘பிரபாஸா?

சற்றுமுன், செய்திகள்
அட்லி இயக்கிய மூன்று படங்களுமே வசூல் அளவில் நன்றாக ஓடியபோதிலும், மூன்று படங்களுமே மெளனராகம், சத்ரியன் மற்றும் அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி என்று ஊடகங்கள் மட்டுமின்றி திரையுலகினர்களே கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் 'மெர்சல்' நன்றாக ஓடியபோதிலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இனிமேல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் 'பாகுபலி 'நாயகன் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது,. இது எந்த படத்தின் காப்பி என்பதை படம் உறுதியானதும் அனேகமாக தெரிந்துவிடும்
ஒல்லி நடிகரின் பட நாயகி சினிமாவில் நடிக்க மறுப்பது ஏன்?

ஒல்லி நடிகரின் பட நாயகி சினிமாவில் நடிக்க மறுப்பது ஏன்?

சற்றுமுன், செய்திகள்
                தனுசுடன் ‘மயக்கம் என்ன’, சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா கங்கோ பாத்யாயா.பின்னர் தெலுங்கில் பிரபாஸ், ரவிதேஜா, நாகார்ஜுனா படங்களில் நடித்தார். தமிழில் ரிச்சா நடித்து 6 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கிடையே 4 வருடங்களுக்கு முன்பு எம்.பி.ஏ படிப்பதற்காக ரிச்சா அமெரிக்கா சென்றார். ரசிகர்கள் டுவிட்டரில் அவரை மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள்? என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தற்போது படிப்பை முடித்துவிட்டார். ஆனால் ரசிகர்களின் கேள்விக்கு, ‘இனி நிச்சயம் நடிக்க வரமாட்டேன்’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.       ‘திரைப்படத்தில் இருந்து வெளியே வந்து 5 வருடங்கள் ஆனபிறகும், என்னுடைய அடுத்த படம் என்ன என
அமராவதியில் நானா? எஸ்.எஸ்.ராஜமௌலி விளக்கம்

அமராவதியில் நானா? எஸ்.எஸ்.ராஜமௌலி விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகும் இரண்டு மாநிலத்திற்கும் ஐதராபாத் தலைநகராக இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த உரிமை இரண்டு மாநிலங்களுக்கும் உள்ளது. இந்நிலையில், ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதியை பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான மாதிரி வடிவங்கள் பல்வேறு நாட்டு நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில், கடைசியாக பிரிட்டிஷ் கட்டிடகலை நிறுவனமான நார்மன் பாஸ்டர் அண்ட் பார்ட்னர்ஸை ஆந்திர அரசு தேர்வு செய்துள்ளது. சட்டப்பேரவை அலுவலகம், உயர்நீதிமன்றம், அரசு வளாகம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களை உள்ளடக்கிய உலகத்தரமான வடிவமைப்பை சமீபத்தில் இந்நிறுவனம் ஆந்திர அரசிடம் ஒப்படைத்துள்ளது. இதன் இறுதி வடிவமைப்புக்கு ‘பாகுபலி’ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நியமிக்கப்பட்டுள்ளதாக செ
பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்ட மகிழ்மதி அரண்மனை

பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்ட மகிழ்மதி அரண்மனை

சற்றுமுன், செய்திகள்
இந்திய திரையுலகில் தனி முத்திரை பதித்த படம் என்றால் அது ‘பாகுபலி’யைத்தான் சொல்ல வேண்டும். இரண்டு பாகங்களாக வெளிவந்த ‘பாகுபலி’ இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டாலும், சில பிரம்மாண்டமான அரங்குகளும் உருவாக்கப்பட்டன. மகிழ்மதி அரண்மனை, குந்தல தேசத்தின் அரண்மனை, மகிழ்மதியின் முன்னால் வானுயர்ந்த பல்லல தேவாவின் வெண்கல சிலை ஆகியவை கலை இயக்குனர்களால் உருவாக்கப்பட்டன. இதற்கு கலை இயக்குனர் சாபு சிரில் தலைமை தாங்கியிருந்தார். பலகோடி ரூபாய் செலவில் உருவான இந்த அரங்குகள் எல்லாம் படத்தில் பார்க்கும்போது அனைவருக்கும் வியப்பாய் இருந்தது. ‘பாகுபலி’ இரண்டு பாகம் மட்டுமே உருவாகும் என்று அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனவே, இனிமேல் அங்கு எந்த படப்பிடிப்பும் நடத்தவேண்டிய சூழ்நிலை இல்லாததால்
பாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

பாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக இவர் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸை சந்தித்து ஒரு கதையை அவரிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதை பிரபாஸுக்கு பிடித்துப் போய்விட்டதாகவும், அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் - பிரபாஸ் இணையும் அந்த படம் பாகுபலிக்கு இணையாக பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறதா
கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான்  – பிரபாஸ்

கிசுகிசுக்கள் வருவது சகஜம்தான் – பிரபாஸ்

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி திரைப்படத்தின் மூலம் பலரின் மனதை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ்.  உலக அளவில் வரலாறு காணாத வெற்றியை இப்படம் பெற்றதற்கு காரணம் SS ராஜமௌலியின் பிரமாண்டமான இயக்கமும், பிரபாஸின் துணிச்சலான நடிப்பும் தான் . பாகுபலி படத்தின் மூலம் பிரபாஸிற்கு ரசிகர் கூட்டம் கூடியது, பல பெண்களின் கனவு நாயகனாகவும் இவர் திகழ்கிறார். அத்திரைப்படத்தில் அவர் பேசிய சில வசனங்கள் பெண்களின் மனதை மிகவும் கவர்ந்தது. பாகுபலி  பாகம் இரண்டிற்கு பிறகு பிரபாஸிற்கு 6000 வரன்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனிடையில் பாகுபலியில்  ஜோடியாக தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்காவிற்கும் பிரபாஸிற்கும் இடையில் காதல் கனிந்துள்ளது என பல கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் பில்லா , மிர்ச்சி , பாகுபலி இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளனர். இந்த நிலையில்  பிரபாஸிடம் தன திருமணத்தை குறித்து விசாரித்தபோது. "என் ரசிகர்கள் என் திருமணத்தை பற்றி தற்போதைக்கு
நான் இன்னொரு ‘பாகுபலி’க்குத் தயார்: பிரபாஸ்

நான் இன்னொரு ‘பாகுபலி’க்குத் தயார்: பிரபாஸ்

சற்றுமுன், செய்திகள்
உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கான ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தப் படம் பாகுபலி. இதன் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் பெரும் வெற்றி பெற்று புகழையும் வசூலையும் உலகளவில் அள்ளிக்குவித்தது. இது ஒரு பக்கம் இருக்க எஸ்.எஸ் ராஜமௌலியின் இந்த பிரம்மாண்ட படம் எடுத்து முடிக்க 4 ஆண்டுகள் ஆனது. பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்தின் மூலம் பெண்கள் மத்தியில் டார்லிங் என்றே கொண்டாடப்படுபவர், தற்போது பாலிவுட்டில் ரிலீசாகவுள்ள தனது ‘சாஹோ’ படத்திற்கான புரோமோஷ்னல் வேலைகளில் உள்ளார். “பாகுபலி” போன்ற பிரமாண்ட படங்களில் இனி நடிபீர்களா” என்று கேட்கப்பட்டதற்கு, “கதை சிறப்பானதாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், ஆனால் அதே போன்று தொடர்ந்து 4 ஆண்டுகள் வேலை செய்வது கடினம் 2 ஆண்டுகள் என்றால் சரி” என்று கூறியுள்ளார்.
பிரபாசுடன் நடித்தால் எனக்கு அந்த ஃபீலிங் தான் வரும். மஞ்சுலட்சுமி

பிரபாசுடன் நடித்தால் எனக்கு அந்த ஃபீலிங் தான் வரும். மஞ்சுலட்சுமி

சற்றுமுன், செய்திகள்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மஞ்சுலட்சுமி. 40 வயதை நெருங்கிவிட்ட போதிலும் இன்னும் அக்கா, அம்மா வேடங்களை ஏற்காமல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி 2' படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க முதலில் ராஜமெளலி, முதலில் மஞ்சுலட்சுமியிடம் தான் பேசினார். ஆனால் பிரபாசை விட வெறும் இரண்டு வயது மட்டுமே அதிகமான தன்னால் அவருக்கு எப்படி அம்மாவாக நடிக்க முடியும் என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான் பின்னர் ரம்யாகிருஷ்ணன் அந்த கேரக்டருக்கு ஒப்பந்தமானார். தற்போது 'பாகுபலி 2' படம் வெளியாகி சுமார் ரூ.1600 கோடிகளை குவித்த நிலையிலும் அந்த படத்தை மிஸ் செய்தது குறித்து லட்சுமி மஞ்சு கவலைப்படவில்லை. இப்போதும் சொல்கிறேன் எனக்கு பிரபாசுடன் நடிக்கும்போது அம்மா ஃபீலிங் வராது, வேற மாதிரி ஃபீலிங் தான் வரும்'
படப்பிடிப்பே துவங்கவில்லை ; ரூ.350 கோடி வசூல் செய்த பிரபாஸ் படம்

படப்பிடிப்பே துவங்கவில்லை ; ரூ.350 கோடி வசூல் செய்த பிரபாஸ் படம்

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி ஹீரோ பிரபாஸ் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்தின் இந்திய உரிமை ரூ.350 கோடியை வசூல் செய்துள்ளது. நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. அதிலும், பாகுபலி2 படம் இதுவரை ரூ.1500 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள படம் சாஹோ. இந்த படம் தெலுங்கு, தமிழ்,ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த படம் பிரபாஸிற்கு 19வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் துவங்கப்படவில்லை. ஆனால், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு கம்பெனி ரூ.350 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது.. இதுவரை எந்த படத்தின் வெளியீட்டு உரிமையும் இவ்வளவு அதிக விலைக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.