குறிச்சொல்: மாம்

எதிரிகளையும் மனதால் வென்ற ஸ்ரீதேவி: பாகிஸ்தான் பிரபலங்களும் இரங்கல்

எதிரிகளையும் மனதால் வென்ற ஸ்ரீதேவி: பாகிஸ்தான் பிரபலங்களும் இரங்கல்

சற்றுமுன், செய்திகள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கடந்த பல வருடங்களாக எதிரி நாடுகளாக இருந்து வரும் நிலையில் ஸ்ரீதேவியின் மறைவிற்கு பாகிஸ்தானை சேர்ந்த திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளது அவர் எதிரிகளின் மனதையும் வென்றதாக கருதப்படுகிறது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகை சஜல் அலி கான் ஸ்ரீதேவியின் மறைவு குறித்து கூறியபோது, 'தனது அம்மாவை மீண்டும் ஒருமுறை இழந்துள்ளதாக கூறியுள்ளார். இவர் ஸ்ரீதேவியின் கடைசி திரைப்படமான ‘மாம்’ படத்தில் ஸ்ரீதேவியின் மகள் வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாம் படப்பிடிப்பின்போது தேவி அவர்கள் ததன்னுடைய மகள் போன்று தன்னை பார்த்துக்கொண்டதாகவும், தன்னுடைய தாயை மீண்டும் ஒருமுறை இழந்தது போன்று தான் உணர்வதாகவும் நடிகை சஜல் அலிகான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் வெளியாகவுள்ள மயிலு படம்!

சர்வதேச அளவில் வெளியாகவுள்ள மயிலு படம்!

சற்றுமுன், செய்திகள்
நடிகை ஸ்ரீதேவி நடித்து சமீபத்தில் வெளியான பாலிவுட்  திகில் திரைப்படமான ‘மாம்’ ரஷ்யா, போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் வெளியாகிறது. இந்தியாவில் ‘மாம்’ திரைப்படம் ஜூலை 7 ஆம் தேதி வெளியாகியது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக என்னவெல்லாம் செய்வாள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு வெளியானது. இந்திய சினிமாக்கள் ஹாலிவுட் படங்களுக்கு ஈடாக சர்வேதேச திரையரங்குகளில் வெளியிடப்படுவதும், மற்ற நாட்டவர்களால் வரவேற்கப்படுவதும் போக்குசமீப காலமாக வளர்ந்து வருகிறது. ‘பாகுபலி’ வெற்றி நாம் எல்லோரும் அறிந்ததே. அதன் வரிசையில் ‘மாம்’ திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் இன்டெர்நேஷ்னல் விநியோகிக்கிறது, ரஷ்யாவில் 21 திரைகளிலும், போலந்தில் 9 திரைகளிலும், செக் குடியரசில் 3 திரைகளிலும் இப்படம் வெளியாகிறது மேலும் இது அக்டோபர் மாதம் வெளியீடப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படம் ஸ்ரீதேவியின் 300 வது படம்