குறிச்சொல்: மும்பை

ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் மும்பை தாராவி போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட் பணி முடிவடைந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று செட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் போது ஏணி ஒன்றை ஊழியர் ஒருவர் தூக்கி கொண்டு வந்தார். அப்போது அவர் நடந்து வந்த பாதையில் இருந்த மின்வயரை மிதித்தார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் படக்குழுவினர்களும் செட் அமைக்கும் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பலியான ஊழியர் பெயர் மைக்கேல் என்பதும் அவருடைய மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை தாராவியை சென்னைக்கு தூக்கி வரும் ரஞ்சித்

மும்பை தாராவியை சென்னைக்கு தூக்கி வரும் ரஞ்சித்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் ரஜினியை பார்க்க அதிகளவில் கூட்டம் கூடுவதால் திட்டமிட்டபடி காட்சிகளை படமாக ரஞ்சித் திணறி வருகிறாராம். இந்த நிலையில் ரஜினியின் ஒருசில முக்கிய காட்சிகளை மட்டும் தாராவியில் முடித்துவிட்டு ரஜினியை சென்னைக்கு அனுப்பிவிட்டாராம். தாராவியில் ரஜினி சம்பந்தப்பட்ட மீதி காட்சிகளுக்காக சென்னையில் உள்ள ஒரு தீம்பார்க்கில் தாராவி போன்ற செட், பலகோடி செலவில் தயாராகி வருகிறது. மும்பை படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் உள்ள தாராவி செட்டில் இருபது நாட்கள் படப்பிடிப்பை நடத்த ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும், இத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
காலா படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி பட்டேல்..

காலா படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி பட்டேல்..

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தில் பாலிவுட் நடிகை அஞ்சலி பட்டேல் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் காலா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 2 படங்கள் வெளியிடப்பட்டது. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஏற்கனவே பாலிவுட் நடிகையான ஹூமா குரோஷி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு டெரரான வேடத்தில் மற்றொரு பாலிவுட் நடிகையான அஞ்சலி பட்டேல் நடிக்க இருக்கிறார். காலா என்பது கரிகாலன் என்பதன் சுருக்கம் எனவும், நெல்லை மாவட்டத்திலிருந்து மும்பைக்கு சென்று செட்டிலான மக்களை பற்றிய கதை எனவும் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ம் தேதி மும்பையில் தொடங்கப்படவுள்ளது.