குறிச்சொல்: மெர்சல்

வைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது? விஜய் ரசிகர்கள் கவலை

வைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது? விஜய் ரசிகர்கள் கவலை

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த விஜய்க்கு இங்கிலாந்து நாட்டின் விருது கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கான விருது பட்டியலில் விஜய் பெயரும் உள்ளது. இந்த விருதை விஜய் வெல்ல வேண்டுமானால் வரும் 20ஆம் தேதிக்குள் அதிக வாக்குகள் ஆன்லைன் மூலம் பதிவாக வேண்டும் விஜய்க்கு இந்த விருது கிடைத்தே ஆகவேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் இரவுபகலாக வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் இந்த இணையதளத்தை வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் வைரஸ் தாக்குதலால் விஜய் ரசிகர்களால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு கிடைக்க விருது கையைவிட
என் தம்பி விஜய் விருது வாங்குவது எனக்கு மிக மகிழ்ச்சி: கமல்ஹாசன்

என் தம்பி விஜய் விருது வாங்குவது எனக்கு மிக மகிழ்ச்சி: கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சமீபத்தில் விகடன் அறிவித்தது. இந்த விருது விழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விருது வழங்கும் விழாவில் விகடன் விருதினை நடிகர் விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். இந்த விருதினை வழங்கிய பின்னர் கமல்ஹாசன் கூறியபோது, 'தம்பி விஜய்க்கு இது முதல் விருதும் இல்ல இதோட நிக்கபோறதும் இல்ல. பல கலைஞர்கள் விருது வாங்கும் மேடையில் என் தம்பியும் விருது வாங்குவது மிக மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் இதே மேடையில் வரும் 26ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும், சுற்றுப்பயண விபரங்களை வரும் 18ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.
விஜய்க்கு கொடுத்த விருதை பிடுங்கி அஜித்துக்கு கொடுத்த நெட்டிசன்கள்

விஜய்க்கு கொடுத்த விருதை பிடுங்கி அஜித்துக்கு கொடுத்த நெட்டிசன்கள்

சற்றுமுன், செய்திகள்
பிரபல பத்திரிகையான விகடன், 2017ஆம் ஆண்டிற்கான திரை நட்சத்திரங்களுக்கான விருதுகளை சற்றுமுன் அறிவித்தது. இதன்படி சிறந்த நடிகருக்கான விருது இளையதளபதி விஜய்க்கு கிடைத்தது என்பதை சற்றுமுன் பார்த்தோம் இந்த நிலையில் இந்த அறிவிப்பில் இருந்த விஜய் பெயரை எடுத்துவிட்டு அதில் அஜித் என்று பதிவு செய்து மெர்சல் படத்திற்கு பதிலாக விவேகம் படத்தை மாற்றி நெட்டிசன்கள் தங்கள் சேட்டையை ஆரம்பித்துள்ளனர். அச்சு அசலாக விகடன் பெயரில் ஒரு டுவிட்டர் அக்கவுண்டையும் ஆரம்பித்து இதை பதிவுசெய்துள்ளனர். இந்த இரண்டையும் மாறி மாறி பார்த்து வரும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
விகடன் விருதை வென்றார் மெர்சல் விஜய்

விகடன் விருதை வென்றார் மெர்சல் விஜய்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே நல்ல ரிசல்ட்டை பெற்ற நிலையில் தமிழக பாஜக தலைவர்களின் உதவியால் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.250 கோடி வசூல் செய்தது இந்த நிலையில் இந்த படம் தற்போது விருதுகளையும் குவிக்க தொடங்கிவிட்டது. விஜய்க்கு சிறந்த நடிகர் விருதை விகடன் பத்திரிகை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் அளித்துள்ளது. வருடத்தின் ஆரம்பத்திலேயே விருதை குவிக்க தொடங்கிவிட்ட இந்த படம், தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை குவிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
விஜய் எங்களால்தான் பெரிய நடிகர் ஆனார்: அபிராமி ராமநாதன்

விஜய் எங்களால்தான் பெரிய நடிகர் ஆனார்: அபிராமி ராமநாதன்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' உள்பட பல திரைப்படங்களை சென்னையில் ரிலீஸ் செய்த திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று 'ஆறாம் திணை' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார் இந்த விழாவில் அவர் பேசியதாவது: ஒரு படத்தின் வெற்றி, வசூல் ஆகியவை திரையரங்குகளால் தான் கிடைக்கும். ஒரு சின்ன நடிகர் பெரிய நடிகர் ஆவது அந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுவதால்தான் இன்று விஜய் பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால் அவரது படங்களை நாங்கள் திரையரங்குகளில் ஓட்டி வெற்றி பெற செய்ததால் தான் இன்று அவர் பெரிய நடிகராக உள்ளார்' என்று பேசினார்,.
வசூல் குறித்து வதந்தியை பரப்பியவர்களின் வாயை அடைத்த ‘மெர்சல்

வசூல் குறித்து வதந்தியை பரப்பியவர்களின் வாயை அடைத்த ‘மெர்சல்

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பாளருக்கு ஒருசில கோடிகள் நஷ்டம் என்று பேட்டியளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். உலகம் முழுவதும் மெர்சல் படம் சுமார் ரூ.300 கோடி வசூலை பெற்றிருக்கும் நிலையில் இந்த தயாரிப்பாளர் கிளப்பிய வதந்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த நிலையில் சினிமா ஆரம்பமான காலத்தில் இருந்து இன்று வரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படத்தின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் விஜய்யின் மெர்சல் படம் 25வது இடத்தில் உள்ளது. மெர்சல் தவிர இந்த பட்டியலில் ரஜினியின் எந்திரன் மற்றும் கபாலி படங்கௌம் உள்ளது என்பதும் வேறு எந்த தமிழ்ப்படமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2018, பொங்கல்-தீபாவளி இரண்டையும் ஆக்கிரமித்த விஜய்

2018, பொங்கல்-தீபாவளி இரண்டையும் ஆக்கிரமித்த விஜய்

சற்றுமுன், செய்திகள்
பொங்கல் அல்லதி தீபாவளி என்றாலே பண்டிகை மட்டுமின்றி விஜய் படங்களின் ரிலீசும் இருக்கும் என்பதை கடந்த சில வருடங்களாக பார்த்து வருகிறோம். கடந்த தீபாவளி தினத்தில் கூட விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் ரிலீசாகி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த நிலையில் வரும் 2018ஆம் ஆண்டின் பொங்கல், தீபாவளி இரண்டுமே விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய்-முருகதாஸ் இணையும் 'தளபதி 62;' படம் வெளியாவது தெரிந்ததே. ஆனால் 2018 பொங்கல் அன்று விஜய் ரசிகர்களுக்கு என்ன விசேஷம் என்ற கேள்வி எழுகிறதா? அன்று தான் ஜீ தொலைக்காட்சியில் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2018ஆம் ஆண்டு பொங்கலும், தீபாவளியும் விஜய் ரசிகர்களின் ஆக்கிரமிப்பில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
மலேசிய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் இளையதளபதி விஜய்

மலேசிய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் இளையதளபதி விஜய்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஸ்டார் நைட் நிகழ்ச்சி மலேசியாவில் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளையதளபதி விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் கூறியுள்ளார். அதேபோல் அஜித்தையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மெர்சலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விஜய் அளித்த அறிக்கை

மெர்சலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விஜய் அளித்த அறிக்கை

சற்றுமுன், செய்திகள்
மெர்சல் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன், நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்கள், ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும், மெர்சல் படக்குழுவினர
இளையதளபதி விஜய்யின் நன்றி அறிக்கை

இளையதளபதி விஜய்யின் நன்றி அறிக்கை

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் விஜய் நன்றி கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது 'மெர்சல்' திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுக்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றும் மிகப் பெரிய வெற்றிப்படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியடைந்துள்ள 'மெர்சல்' திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பர்க