குறிச்சொல்: ரசிகர்கள்

முன்னாள் கண்டக்டர் ரஜினியுடன் இந்நாள் கண்டக்டர்

முன்னாள் கண்டக்டர் ரஜினியுடன் இந்நாள் கண்டக்டர்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 4வது நாளாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் அவர் சந்தித்து வரும் நிலையில் கோவையை சேர்ந்த கண்ணன் என்ற கண்டக்டர் ரஜினியை சந்திக்க கண்டக்டர் சீருடையில் வந்துள்ளார். கோவை போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவர், முன்னாள் கண்டக்டர் ரஜினியை சந்தித்தது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது கண்ணன் இன்னைக்கு கலக்கல் கண்ணன் ஆகிட்டாரு, வாழ்த்துக்கள் என ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்: ரசிகர்களின் அதிர்ச்சி கருத்து

ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்: ரசிகர்களின் அதிர்ச்சி கருத்து

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்றும், அவர் நிச்சயம் வரும் 31ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினியின் ரசிகர்கள் பலர் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் தற்போதைய அரசியல் அவருக்கு சரியாக வராது என்றும் கூறி வருகின்றனர். மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இதுகுறித்து கூறியபோது: அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் நிச்சயம் அறிவிக்க மாட்டார். ரசிகர்களுடனான சந்திப்பை உற்சாகப்படுத்தவே இதுபோன்று அவர் பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள சூழலுக்கும், ரஜினியின் குணத்துக்கும் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது. அவரால் அரசியலில் வெற்றி பெறவும் முடியாது. 1996-ல் மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னரும் சில வாய்ப்புகள் தேடி வந்தன. இதையெல்லாம் பயன்படுத்த தவறிவிட்டார். தமிழருவி மணியனை அடிக்கடி சந்திப்பதாலும் அரச
31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு: ரஜினிகாந்த்

31ஆம் தேதி அரசியல் நிலைப்பாடு: ரஜினிகாந்த்

சற்றுமுன், தமிழகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இயக்குனர் மகேந்திரன் மற்றும் ரஜினிகாந்த் பேசினார் ரஜினிகாந்த் பேசியபோது, 'நான் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிக்க உள்ளேன்' என்று கூறினார். உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். உடனே ரஜினி, 'நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லவில்லை, எனது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாகத்தான் சொன்னேன்' என்று கூறியதால் ரசிகர்கள் அமைதியாகினர் மேலும் எனக்கு அரசியல் எவ்வளவு ஆழம் என்பது தெரியும். அது தெரிந்ததால் தான் அமைதியாக உள்ளேன். ஒருவேளை தெரியாமல் இருந்திருந்தால் எப்போதோ வந்திருப்பேன் என்று கூறினார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் எண்ட்ரி தேதி அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் எண்ட்ரி தேதி அறிவிப்பா?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அரசியல் உள்பட பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நிலையில் தற்போது 2ஆம் கட்ட சந்திப்புகான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 26 முதல் 31 வரை கோடம்பாக்கம் ராகவேந்திரா மஹாலில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் காலை 8 மணி முதல் மதியம் 3 வரை இந்த ஆறு நாட்களில் ரஜினிகாந்த் தினமும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வரும் ஜனவரியில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரஜினியின் சகோதரர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் அதை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.
2018ல் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் சீயான் விக்ரம்

2018ல் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் சீயான் விக்ரம்

சற்றுமுன், செய்திகள்
சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இந்த ஆண்டு வெளியான நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2018ஆம் ஆண்டு அவருடைய ரசிகர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது ஆம் சீயான் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்', 'ஸ்கெட்ச்', மற்றும் சாமி 2' ஆகிய மூன்று படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. மூன்று திரைப்படங்களும் பிரபல இயக்குனர்களால் உருவாக்கப்பட்டு வருவதால் மூன்று வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிப்பது உறுதி என்று கூறப்படுகிறது
சினிமாவிற்கு முழுக்கு – அதிர்ச்சி கொடுக்கும் கமல்ஹாசன்

சினிமாவிற்கு முழுக்கு – அதிர்ச்சி கொடுக்கும் கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
அரசியலில் களம் இறங்கிய பின் சினிமாவிற்கு முழுக்குப் போட இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே, ஊழல் மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கம், ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து வருகிறார். அதோடு, விரைவில் தான் அரசியலுக்கு வருவேன். அது மக்களுக்கான கட்சியாக இருக்கும். ஊழலை ஒழிப்பதுதான் முதல் வேலை எனக்கூறியுள்ளார். அதேபோல், அரசியலுக்கு வந்த பின் சினிமாவிலிருந்து விலகி விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி அவரின் தீவிர ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.        
பிக்பாஸ் முடிந்த பின் வச்சுக்கலாம் : ரசிகர்களை குஷிப்படுத்திய ஓவியா

பிக்பாஸ் முடிந்த பின் வச்சுக்கலாம் : ரசிகர்களை குஷிப்படுத்திய ஓவியா

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை பகிர்ந்து வருகிறார். ஆனால், லைவ் சேட் அதவது ரசிகர்களுடன் அவர் நேரடியாக உரையாட வேண்டும் என அவரின் பல ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை அதற்கு ஓவியா சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ லைவ் சேட் செய்ய வேண்டும் என என்னிடம் பலர் கேட்கின்றனர். எனக்கும் ஆவலாகவும், ஆசையாகவும் இருக்கிறது. பிக்பாஸ் 100 நாட்கள் முடிந்த பின் கண்டிப்பாக நாம் பேசுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் குஷியாகி, அதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.  
ரசிகர்களை ஏமாற்றிய விவேகம்….

ரசிகர்களை ஏமாற்றிய விவேகம்….

சற்றுமுன், செய்திகள்
அஜீத் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. இப்படம் வெளிநாடுகளில் நேற்றே வெளியாகியிவிட்டது. தமிழகத்தின் பல தியேட்டர்கள் இந்த படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் டிக்கெட்டை வாங்க அஜித் ரசிகர்கள் முயன்று வருகிறார்கள். சில தியேட்டர்கள் ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் டிக்கெட் கிடைக்காத சில அஜீத் ரசிகர்கள் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விவேகம் பட பேனரை கிழித்த சம்பவமும் இன்று காலை நடந்தது. இந்நிலையில் இப்படத்தின் விமர்சனம் இன்று காலையிலேயே பல ஊடகங்களில் வெளியாகிவிட்டது. இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் அஜீத் நடித்துள்ளார். அனைத்து காட்சிகளிலும் அஜீத் அழகாக இருக்கிறார் எனவும், பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல் இருக்கிறது எனவும், படத்தில் காட்டப்படும் இடங்கள் அழகாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவ
வருத்தம் தெரிவிக்கிறேன்.. விஜயிடமிருந்து வேறுபட்ட தல அஜீத்…

வருத்தம் தெரிவிக்கிறேன்.. விஜயிடமிருந்து வேறுபட்ட தல அஜீத்…

சற்றுமுன், செய்திகள்
சமூக வலைத்தளங்களில் தனது பெயரில் ரசிகர்கள் தெரிவித்த கருத்திற்கு நடிகர் அஜீத் வருத்தம் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களுக்கிடையே பல வருடங்களாக மோதல் நீடித்து வருகிறது. விஜய் படமோ, டிரைலரோ அல்லது புதிய படத்தின் புகைப்படமோ  வெளியானால், அஜீத் ரசிகர்கள் அதை கலாய்ப்பதும், அஜீத் படத்தை விஜய் ரசிகர்கள் கிண்டலடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. தற்போது கூட விஜயின் ‘மெர்சல்’ மற்றும் அஜீத்தின் ‘விவேகம்’ ஆகிய படங்கள் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படங்கள் குறித்தும் இரு ரசிகர்களுக்கிடையேயும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அஜீத்தின் சட்ட ஆலோசகர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், நடிகர் அஜீத்திற்கு டிவிட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ கணக்கு கிடையாது. ஆனால், சில நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை அஜீத்த
ஓவியா உண்ணாவிரதம் ; ரசிகர்கள் அதிர்ச்சி : பின்னணி என்ன?

ஓவியா உண்ணாவிரதம் ; ரசிகர்கள் அதிர்ச்சி : பின்னணி என்ன?

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஓவியா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவகாரம் அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சி இன்று ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், ஓவியாவை சாப்பிடுமாறு அனைவரும் வற்புறுத்துகிறார்கள். ஆனால், அவரோ, கேமரா முன்பு வந்து, பிக்பாஸ் என்னை அழைத்து பேசும் வரை சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கிறார். மேலும், இதுபற்றி காயத்ரி, ஆரவ், சக்தி, சினேகன் என எல்லோரும் அவர்களின் அறையில் விவாதிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது, இவர் ஒருவரால் எல்லோரின் தூக்கம், நிம்மதி அனைத்தும் கெட்டுப்போகிறது என சக்தி கூற, இந்த வார சனிக்கிழமை இது மாறிவிடும் என காயத்ரி கூறுகிறார். அப்படி மாறவில்லை எனில், சமைக்க மாட்டோம், எந்த வேலையும் செய்ய மாட்டோம் என சக்தி கோபமாக பேசுகிறார். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஆரவ்விடம் தனது காதலை தெரிவித்தார் ஓவியா. ஆனால், ஆரவ் அதை ஏற்கவ