ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: ரஜினிகாந்த்

ரஜினியின் புதிய படம் அறிவிப்பால் தனுஷ் படம் டிராப்பா?

ரஜினியின் புதிய படம் அறிவிப்பால் தனுஷ் படம் டிராப்பா?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடங்கும் நாளை அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஜினியின் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்பது தெரிந்ததே. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை இயக்கவிருந்த நிலையில் திடீரென ரஜினி படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் டிராப்பா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ், தனுஷூக்கு கூறிய கதையைத்தான் கொஞ்சம் ரஜினிக்கு தகுந்தவாறு மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலை தெரியவரும்
இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? மார்ச் 1ஆம் தேதி பாப்பீங்க!!! “

இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? மார்ச் 1ஆம் தேதி பாப்பீங்க!!! “

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் பணிகள் தயாராகிவிட்டதாகவும், மிக விரைவில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் சற்றுமுன்னர் 'காலா' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், தனது டுவிட்டரில் 'காலா' திரைப்படத்தின் டீசர் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த டீசரில் “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற வசன வரியையும் அவர் பதிவு செய்துள்ளதால் டீசருக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 'கபாலி' படத்தில் நான் வந்துட்டேன்னு சொல்லு' என்ற பஞ்ச் போல் இந்த பஞ்ச்சும் பற்றியெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரஜினியை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

ரஜினியை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

சற்றுமுன், செய்திகள்
காலா படத்தை அடுத்து ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் அட்லி,அருவி பட இயக்குனர் மற்றும் கார்த்தி சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டார். இதனால் ரஜினியின் அடுத்த படம் யாருக்கு என்று கோலிவுட்டே ஆவலாக இருந்தது. இந்த போட்டியில் வென்றிருப்பவர் கார்த்தி சுப்புராஜ், ஆம் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்.சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ஏற்கெனவே ஜிகர்தண்டா படத்தை பார்த்த ரஜினி அதில் நடித்த பாபி சிம்ஹா வேடத்தில் தன்னை அணுகியிருந்தால் கண்டிப்பாக நடித்திருப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் அரசியல் பயணம் என்னவோகும் என்ற எதிா்பார்ப்போடு அவரது ரசிகபெருமக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனா். இந்த படத்தின் படப்பிடிப்பு பற்றி எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த படமானது அரசியல் பின்புலத்தை பற்றியதாக இருக்குமோ என்று பேசப்பட்டு வருகிறது.
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

சற்றுமுன், செய்திகள்
கமல் கட்சியை ஆரம்பித்து முதல் கட்டமாக தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கி மதுரை பொதுக்கூட்டத்தில் வைத்து கட்சி கொடி,சின்னம்,கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் ரஜினி தனது ரசிகா்களை சந்தித்து வருகிறார். தற்போது நெல்லை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசியதாவது, சத்தம் போடுகிறவா்கள் போட்டால் போடட்டும் நாம் அமைதியாக நமது வேலையை பார்ப்போம் என்று கூறினார். சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தில் நெல்லை மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதுவரை காணொளி மூலம் கலந்துரையாடி வந்த ரஜினி இன்று திடீரென நேரில் நெல்லை மாவட்ட ரசிகா்களை நேரில் சந்தித்து பேசினார். நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் பேசியதாவது, அரசியலில் மிக முக்கியம் குடும்பம். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும். இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்க
நீங்கள் செய்ய முடிந்தவர்: கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து

நீங்கள் செய்ய முடிந்தவர்: கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில மாதங்களாகவே ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து வருபவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் என்று முழங்கி வரும் இவர், சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ''அறிவாளியாய் இருப்பதை விட புத்திசாலியாய் இருக்கிறவன் தான் ஜெயிப்பான் என்பது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ்நாடு சாதி, இனம், மதம் என்ற வேற்றுமைகளால் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. இவை அத்தனையையும் கூட்டிச் சேர்ப்பது பெரும்பாடு. கரை வேட்டி கட்டி, கட்சிக் கொடி பிடித்து, மேடை போட்டு, மைக் பிடித்து பேசுவது மட்டும்தான் மக்களுக்கான அரசியல் பிரச்சாரம் அல்ல! திரைப்படத்தின் மூலமும் சமூக அரசியல் கருத்துகளைச் சொல்லலாம். என் திரைப்படங்களை சென்சார் செய்யாமல் திரையிட அனுமதித்தால் ஒரே ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி
ரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்

ரிலீசுக்கு முன்பே லீக் ஆன ‘காலா’ சண்டைக்காட்சி: அதிர்ச்சியில் படக்குழுவினர்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் 14 வினாடி சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14 வினாடிகள் மட்டுமே அடங்கிய அந்த லீக் வீடியோவில் ரஜினிகாந்த் தன்னை அடிக்க வரும் வில்லன் ஒருவரை, உதைப்பது போன்றும் அதன் பின்னணி நெருப்பு எரிவது போன்றும் உள்ளது. காலா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு டீசர் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இணையத்தில் லீக் ஆன காட்சி தயாரிப்பாளர் தனுஷை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ரஜினி கட்சியில் சேருகிறார் லைகாவின் ராஜூமகாலிங்கம்

ரஜினி கட்சியில் சேருகிறார் லைகாவின் ராஜூமகாலிங்கம்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்சன்ஸ் நிறுவனத்தில் கிரியேட்டிங் ஹெட் ஆக பணிபுரிந்து வருபவர் ராஜூ மகாலிங்கம், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே ரஜினியுடன் நல்ல நட்புடன் இருக்கும் இவர் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரஜினியின் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றவே ராஜூ மகாலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
ரெண்டில் ஒண்ணு பார்த்திடலாம், களத்துக்கு வா தலைவா: ரஜினி குறித்த ராகவா லாரன்ஸ் பாடல்

ரெண்டில் ஒண்ணு பார்த்திடலாம், களத்துக்கு வா தலைவா: ரஜினி குறித்த ராகவா லாரன்ஸ் பாடல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ள நிலையில் சற்றுமுன்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த பாடல் போதும் பட்டதெல்லாமே போதும், மாத்துவோம் யாரு என்ன சொன்னாலும் ஊர மாத்துவோம், ஓட்டு போட்டவனை முட்டாளுன்னு பார்க்குறாங்க வா கேட்டிடலாம், வா தூக்கிடலாம் உன்னை போல ஒரு நல்லவரு தேவைங்க நீ வந்தா மாற்றம் தானே தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா நல்ல நேரம் பொறக்கணும் இங்க சிஸ்டம் மாற கூப்பிடறோம் இஷ்டப்பட்டு நீங்க வந்தா எப்போதுமே தோள் கொடுப்போம் விட்ட குறை தொட்ட குறை உனக்காக காத்திருப்போம் ஒரு வார்த்தை நீ சொல்லிப்புட்டா தமிழ்நாடே தூள் பறக்கும் தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா உங்க கூட்டம் அன்பு கூட்டம்
முன்னாள் கண்டக்டர் ரஜினியுடன் இந்நாள் கண்டக்டர்

முன்னாள் கண்டக்டர் ரஜினியுடன் இந்நாள் கண்டக்டர்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 4வது நாளாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் அவர் சந்தித்து வரும் நிலையில் கோவையை சேர்ந்த கண்ணன் என்ற கண்டக்டர் ரஜினியை சந்திக்க கண்டக்டர் சீருடையில் வந்துள்ளார். கோவை போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவர், முன்னாள் கண்டக்டர் ரஜினியை சந்தித்தது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது கண்ணன் இன்னைக்கு கலக்கல் கண்ணன் ஆகிட்டாரு, வாழ்த்துக்கள் என ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்: ரசிகர்களின் அதிர்ச்சி கருத்து

ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்: ரசிகர்களின் அதிர்ச்சி கருத்து

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்றும், அவர் நிச்சயம் வரும் 31ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினியின் ரசிகர்கள் பலர் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் தற்போதைய அரசியல் அவருக்கு சரியாக வராது என்றும் கூறி வருகின்றனர். மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இதுகுறித்து கூறியபோது: அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் நிச்சயம் அறிவிக்க மாட்டார். ரசிகர்களுடனான சந்திப்பை உற்சாகப்படுத்தவே இதுபோன்று அவர் பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள சூழலுக்கும், ரஜினியின் குணத்துக்கும் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது. அவரால் அரசியலில் வெற்றி பெறவும் முடியாது. 1996-ல் மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னரும் சில வாய்ப்புகள் தேடி வந்தன. இதையெல்லாம் பயன்படுத்த தவறிவிட்டார். தமிழருவி மணியனை அடிக்கடி சந்திப்பதாலும் அரச