ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: விக்ரம் வேதா

சிவாவை ’ஓரம்போக’ சொல்லி ’வா குவாட்டர் கட்டிங்’-க்கு ஓகே சொன்ன அஜித்

சிவாவை ’ஓரம்போக’ சொல்லி ’வா குவாட்டர் கட்டிங்’-க்கு ஓகே சொன்ன அஜித்

சற்றுமுன், செய்திகள்
      தல-யின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்பது தான்  ரசிகர்களின் பெரிய கேள்வி.விவேகத்தில் சிவா கொடுத்த ஏமாற்றத்தின் வலியை அஜித் சீக்கிரம் மறக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. தனக்காக கதை தயார் செய்யாமல் நல்ல கதையாக தயார் செய்யும் இயக்குநர்களாகத் தேடி அப்படி அவர் டிக் அடித்திருப்பது புஷ்கர் காயத்ரியை. ஓரம்போ,  வ குவார்ட்டர் கட்டிங், விக்ரம் வேதா என்று டார்க் ஃப்ளேவர் கதைகளாக சொல்லி அடிப்பவர்கள் இந்த ஜோடி.       ஜிஎஸ்டி விளைவால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவது இனி சிரமம் என்று சொல்லப்பட்ட நிலையில்தான் விக்ரம் வேதா வெளியானது. டிக்கெட் விலை முக்கியம் இல்லை. நல்ல படமா என்பதுதான் முக்கியம் என்பதை நிரூபித்தது விக்ரம் வேதா.       நமக்கு வந்த தகவல்படி இந்த இயக்குநர் ஜோடியை அழைத்து கதை கேட்டு ஓகே
விக்ரம் வேதா 50 கோடி வசூல் வசூல் செய்ததா?

விக்ரம் வேதா 50 கோடி வசூல் வசூல் செய்ததா?

சற்றுமுன், செய்திகள்
கடந்த ஜூலை 21 ஆம் தேதி 'விக்ரம் வேதா’ திரைப்படம் வெளியானது. பலதரப்பட்ட வேடங்களை ஏற்கும் தனித்துவ நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இதில் முதல்முறை இணைந்து நடித்துள்ளனர். இந்தப் புதிய கூட்டணியில் வெளியான 'விக்ரம் வேதா’தமிழ்ப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் நிலையில் இந்தப் படம் 50 கோடிரூபாய் வசூலை எட்டியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜி.எஸ்.டி பிரச்சனையால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. ஓரம் போ,  ராக்கோழி படத்தை இயக்கிய புஷகா்-காயத்ரிஇந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில்விஜய்சேதுபதி, மாதவன், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய பலர் நடித்துள்ளனர்.
விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த பட அறிவிப்பு…

விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த பட அறிவிப்பு…

சற்றுமுன், செய்திகள்
விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் விக்ரம் வேதா. இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், பல கோடி வசூலையும் வாரி குவித்துள்ளது. இப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோரின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. வெளியான அனைத்து திரையரங்கிலும் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கணவன் மனைவி ஆவர். இவர்கள் நடிகர் ஆர்யாவை வைத்து  ‘ஓரம்போ’படத்தை இயக்கினர். அதன் பின் மிர்சி சிவாவை வைத்து ‘குவாட்டர் கட்டிங்’ என்ற படத்தை இயக்கினர். அதன் பின் 7 வருடங்கள் கழித்து தற்போது விக்ரம் வேதா படத்தை இயக்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களின் அடுத்த படம் குறித்து சில தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமே அடுத்த படத
தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் – விரைவில்!

தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் – விரைவில்!

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் வேதா படத்தைத் தயாரித்த Y-Not Studios சஷிகாந்த்தின் தயாரிப்பில் தமிழ் படம் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது. தமிழ் படம் 2010 ஆண்டில் தயாநிதி அழகிரியின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் மூலம் தயாரித்து, சிவா மற்றும் திசா பாண்டே நடிப்பில் வெளியானது. பிரபல தமிழ் படங்களின் காட்சிகளை நகைச்சுவை பாணியில் வழங்கிய இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்படமாகியது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெகுவாக எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த எதிர்ப்பார்ப்பிற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக 6 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் சஷிகாந்தின் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு நடக்கும் என்று  சமீபத்தில் பிரபல நாளிதழில் அளித்த பேட்டியில் சி. எஸ். அமுதன்  தெரிவித்துள்ளார். தமிழ் படம் இரண்டாம் பாகத்திலும் சிவா கதாநாயகனாக நடிப்பது க
விஜய்சேதுபதியிடம் பேசக்கூடாது என்று முடிவெடுத்தேன்: மாதவன்

விஜய்சேதுபதியிடம் பேசக்கூடாது என்று முடிவெடுத்தேன்: மாதவன்

சற்றுமுன், செய்திகள்
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் முதன்முதலாக மாதவன் இணைந்து நடித்த படம் 'விக்ரம் வேதா'. இந்த படம் கடந்த வாரமே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் திரையரங்குகள் வேலைநிறுத்தம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து மாதவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: 'நானும் விஜய்சேதுபதியும் இந்த படத்தில் எதிரெதிர் கேரக்டர்களில் நடித்துள்ளோம். எனவே படப்பிடிப்பு முடியும் வரை அவரை நேரில் சந்தித்து பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன். அவருடன் பேசி நெருங்கி பழகிவிட்டால் பின்னர் படத்தில் அவருக்கு எதிரியாக நடிக்க கஷ்டமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு தன்னுடைய கேரக்டர் மட்டும் நன்றாக வரும் என்று விஜய்சேதுபதி நினைத்திருந்தால் இந்த படம் வேற மாதிரி வந்திருக்கும். ஆனால் கமல் எப்படி என்னிடம் நடந்து கொண்டாரோ, அதே மாதிரி விஜய்சேதுபதி மிகவும் பக
ஷாருக்கான் – சிவகார்த்திகேயன் இணையும் படம்

ஷாருக்கான் – சிவகார்த்திகேயன் இணையும் படம்

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் நம்மூர் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனும் இன்று மாலை ஒரு விழாவில் இணையவுள்ளனர். விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம் வேதா' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் ஷாருக்கான் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து வெளியிடவுள்ளனர். ஷாருக்கானுடன் இணைந்து ஒரு படத்தின் டிரைலரை வெளியிடும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை இதன்மூலம் சிவகார்த்திகேயன் பெறுகிறார். மாதவன், விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா சிங்கிள் டிராக் வெளியீடு

விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா சிங்கிள் டிராக் வெளியீடு

சற்றுமுன், செய்திகள்
இரு நடிகா் சோ்ந்து நடிப்பது என்பது தற்போது சினிமாவில் டிராண்டாக உள்ளது. அது மாதிாி இரு இயக்குநா் இணைந்து ஒரு படத்தை இயக்கி உள்ள படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனா். இதன் பா்ஸ்ட் லுக் மற்றும் டீசா் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாா், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஜான் விஜய் உள்ளபட பலரும் நடித்துள்ளனா். இதை புஷ்கா் மற்றும் காயத்ரி இயக்கியுள்ளனா். மேலும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாாித்து வருகிறது. டசக்கு டசாக்கு என்ற சிங்கிள் டிராக் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தனது ட்விட்டா் வலைத்தளத்தில் நடிகா் சித்தாா்த் பதிவிட்டுள்ளாா்.