குறிச்சொல்: விஜய்

வைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது? விஜய் ரசிகர்கள் கவலை

வைரஸ் தாக்குதலால் கையை விட்டு போகுமா விருது? விஜய் ரசிகர்கள் கவலை

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த விஜய்க்கு இங்கிலாந்து நாட்டின் விருது கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கான விருது பட்டியலில் விஜய் பெயரும் உள்ளது. இந்த விருதை விஜய் வெல்ல வேண்டுமானால் வரும் 20ஆம் தேதிக்குள் அதிக வாக்குகள் ஆன்லைன் மூலம் பதிவாக வேண்டும் விஜய்க்கு இந்த விருது கிடைத்தே ஆகவேண்டும் என்பதற்காக விஜய் ரசிகர்கள் இரவுபகலாக வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் இந்த இணையதளத்தை வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிகிறது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் வைரஸ் தாக்குதலால் விஜய் ரசிகர்களால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு கிடைக்க விருது கையைவிட
விகடன் விருது வழங்கும் விழாவில் கமல்-விஜய்

விகடன் விருது வழங்கும் விழாவில் கமல்-விஜய்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
சமீபத்தில் விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. கமல்ஹாசன், விஜய், நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவின் புதிய அசத்தலான புகைப்படங்கள் இதோ:
என் தம்பி விஜய் விருது வாங்குவது எனக்கு மிக மகிழ்ச்சி: கமல்ஹாசன்

என் தம்பி விஜய் விருது வாங்குவது எனக்கு மிக மகிழ்ச்சி: கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சமீபத்தில் விகடன் அறிவித்தது. இந்த விருது விழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விருது வழங்கும் விழாவில் விகடன் விருதினை நடிகர் விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். இந்த விருதினை வழங்கிய பின்னர் கமல்ஹாசன் கூறியபோது, 'தம்பி விஜய்க்கு இது முதல் விருதும் இல்ல இதோட நிக்கபோறதும் இல்ல. பல கலைஞர்கள் விருது வாங்கும் மேடையில் என் தம்பியும் விருது வாங்குவது மிக மகிழ்ச்சி என்று கூறினார். மேலும் இதே மேடையில் வரும் 26ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும், சுற்றுப்பயண விபரங்களை வரும் 18ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.
விஜய்க்கு கொடுத்த விருதை பிடுங்கி அஜித்துக்கு கொடுத்த நெட்டிசன்கள்

விஜய்க்கு கொடுத்த விருதை பிடுங்கி அஜித்துக்கு கொடுத்த நெட்டிசன்கள்

சற்றுமுன், செய்திகள்
பிரபல பத்திரிகையான விகடன், 2017ஆம் ஆண்டிற்கான திரை நட்சத்திரங்களுக்கான விருதுகளை சற்றுமுன் அறிவித்தது. இதன்படி சிறந்த நடிகருக்கான விருது இளையதளபதி விஜய்க்கு கிடைத்தது என்பதை சற்றுமுன் பார்த்தோம் இந்த நிலையில் இந்த அறிவிப்பில் இருந்த விஜய் பெயரை எடுத்துவிட்டு அதில் அஜித் என்று பதிவு செய்து மெர்சல் படத்திற்கு பதிலாக விவேகம் படத்தை மாற்றி நெட்டிசன்கள் தங்கள் சேட்டையை ஆரம்பித்துள்ளனர். அச்சு அசலாக விகடன் பெயரில் ஒரு டுவிட்டர் அக்கவுண்டையும் ஆரம்பித்து இதை பதிவுசெய்துள்ளனர். இந்த இரண்டையும் மாறி மாறி பார்த்து வரும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
விகடன் விருதை வென்றார் மெர்சல் விஜய்

விகடன் விருதை வென்றார் மெர்சல் விஜய்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே நல்ல ரிசல்ட்டை பெற்ற நிலையில் தமிழக பாஜக தலைவர்களின் உதவியால் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.250 கோடி வசூல் செய்தது இந்த நிலையில் இந்த படம் தற்போது விருதுகளையும் குவிக்க தொடங்கிவிட்டது. விஜய்க்கு சிறந்த நடிகர் விருதை விகடன் பத்திரிகை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் அளித்துள்ளது. வருடத்தின் ஆரம்பத்திலேயே விருதை குவிக்க தொடங்கிவிட்ட இந்த படம், தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை குவிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
சிங்கத்தை பட்டியலில் இருந்து வெளியேற்றிய வேலைக்காரன்

சிங்கத்தை பட்டியலில் இருந்து வெளியேற்றிய வேலைக்காரன்

சற்றுமுன், செய்திகள்
இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த ஐந்து படங்களின் பட்டியலாக பாகுபலி, மெர்சல், விவேகம், பைரவா, சிங்கம் ஆகிய படங்கள் பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் சூர்யாவின் சிங்கம் படத்தை இந்த பட்டியலில் இருந்து வெளியேற்றி 5வது இடத்தை பிடித்து கொண்டது. இன்னும் ஒருசில நாட்களுக்கு முன்பு வேலைககான் படம் வெளியாகியிருந்தால் விஜய்யின் பைரவா மற்றும் அஜித்தின் விவேகம் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
அஜித், விஜய் பட வசூலை நெருங்கிய சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்;

அஜித், விஜய் பட வசூலை நெருங்கிய சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்;

சற்றுமுன், செய்திகள்
சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் கடந்த கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகி இரண்டு வாரங்கள் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்தின் சென்னை வசூல் மட்டும் இரண்டு வாரங்களில் ரூ.8 கோடியை தாண்டிவிட்டது. சென்னையை பொருத்தவரையில் அஜித், விஜய் படங்கள் மட்டுமே ரூ.10 கோடி என்ற இலக்கை சர்வசாதாரணமாக தொட்டுவிடும். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் படமும் ரூ.10 கோடி வசூலை நெருங்கிவிட்டது. இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளதாக கோலிவுட் திரையுலகம் கூறி வருகிறது.அவருடைய சம்பளமும் எகிறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா!

அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா!

சற்றுமுன், செய்திகள்
மலேசியாவில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவில் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டுள்ள நிலையில் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான அஜித், விஜய் கலந்து கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளது அஜித், விஜய் இருவருக்குமே தற்போது படப்பிடிப்புகள் இல்லை. இருந்தும் இந்த விழாவில் அவர்கள் கலந்து கொள்ளாததற்கு காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் கமல், ரஜினி மற்றும் விஷாலுக்கு மட்டுமே இந்த விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால் இருவரும் கலந்து கொள்ளவிலலி என்று கூறப்படுகிறது அஜித், விஜய் இல்லாத நட்சத்திர கலைவிழா களைகட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்திசுரேஷ்

விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்திசுரேஷ்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ், மீண்டும் விஜய்யுடன் 'விஜய் 62' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது. அந்த வகையில் காஜல் அகர்வால், சமந்தாவை அடுத்து மிக குறுகிய இடைவெளியில் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் நாயகி பட்டியலில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் இந்த ஆண்டு 'தானா சேர்ந்த கூட்டம், 'மகாநதி, சண்டக்கோழி, சாமி 2 ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்திசுரேஷ் தற்போது விஜய் படத்திலும் இணைந்துள்ளதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளையதளபதி விஜய்யின் ‘விஜய் 62’ படத்தின் போட்டோசெஷன்

இளையதளபதி விஜய்யின் ‘விஜய் 62’ படத்தின் போட்டோசெஷன்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் போட்டோசெஷன் இன்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விஜய்யின் வித்தியாசமான ஸ்டைலிஷான லுக் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது அவற்றை தற்போது பார்ப்போம்