குறிச்சொல்: விஷால்

பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால்

பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால்

சற்றுமுன், செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் திரையரங்குகள் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார். இதன்படி மறு அறிவிப்பு வரும் வரை இனிமேல் எந்த படங்களின் பிரஸ்மீட், பிரஸ் காட்சிகள் மற்றும் சினிமா விழாக்கள் என்பது இல்லை என்பதுதான் அந்த அறிவிப்பு இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், இன்று திட்டமிட்டுள்ள அனைத்து சினிமா விழாக்களும் ரத்து செய்யப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
திரையுலகினர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்?

திரையுலகினர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்?

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கோலிவுட்டின் மூத்த நடிகரான கமல்ஹாசன் கட்சியில் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருசில நடிகர்கள் மட்டுமே கமல்ஹாசன் கட்சியில் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களான அஜித், விஜய், விஷால் உள்பட பலர் குறைந்தபட்சம் கமல்ஹாசனுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை கமல் கட்சியில் நேற்று சினேகன், பரணி, வையாபுரி, ஆர்.கேசுரேஷ், ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகிய திரையுலக பிரபலங்கள் மட்டுமே இணைந்தனர். இவர்களில் நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நாசர் மனைவி கமீலா நாசர் ஆகியோர்களுக்கு கமல் கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவிருப்பதால் அவருடைய கட்சியில் இணையும்பொருட்டே ப
மருத்துவமனையில் விஷால்

மருத்துவமனையில் விஷால்

சற்றுமுன், செய்திகள்
படப்பிடிப்பின்போது நடிகா் விஷாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தின் காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகா் சங்கத்தின் பொருளாளராகவும், சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகராகவும் என பன்முக கொண்டவா் விஷால். இவா் பிசியாக நடித்துக்கொண்டும், சங்க பணிகளையும் கவனித்துக்கொண்டு வரும் அவா் மித்ரன் இயக்கத்தில் சமந்தாவுடன் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்து முடிந்துள்ளார்.இந்நிலையில் இரும்புத்திரை படத்தை தொடா்ந்து சண்டக்கோழி 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே சண்டைக்கோழி படத்தை லிங்குசாமி இயக்கத்தில் மாஸ் ஹிட்டை அடித்தது. தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள சண்டைக்கோழி 2 வரும் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்
விஜய் ரசிகர் விஷாலுக்கு வில்லனா? புதிய தகவல்

விஜய் ரசிகர் விஷாலுக்கு வில்லனா? புதிய தகவல்

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் விஜய் ரசிகர்கள் குறித்த ஒரு திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கலாம். போக்கிரி சைமன்' என்ற இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அப்பானி சரத் இவர் ஒரு தீவிர விஜய் ரசிகராக அந்த படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் அப்பானி சரத் தற்போது விஷாலின் சண்டக்கோழி 2' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது விஷால் மற்றும் மணிரத்னம் படத்தில் முதன்முதலாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அப்பானி சரத், தமிழில் அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று கூறியுள்ளார்
கறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால்

கறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால்

சற்றுமுன், செய்திகள்
நடிகை அமலாபால் தி. நகர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்த்தார். அதில் நடனப்பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். அமலாபாலின் இந்த துணிச்சலைப் பாராட்டி தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த விஷாலுக்கு அமலாபால் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி விஷால். பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டை போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார். அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலாக இருந்தது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

ரஜினி, கமல், விஷாலின் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்: சூர்யா

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் விஷால் ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய அரசியல் பயணம் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ செல்லவுள்ள நிலையில் கோலிவுட் திரையுலகினர் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா, மூவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இதனை அவர் உறுதி செய்தார். இந்த விழாவில் அவர் கூறியதாவது: அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
இது நட்சத்திர கலைவிழாவா? விஷால் கலைவிழாவா? நடிகர்கள் புலம்பல்

இது நட்சத்திர கலைவிழாவா? விஷால் கலைவிழாவா? நடிகர்கள் புலம்பல்

சற்றுமுன், செய்திகள்
ஜனவரி 6ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு ரஜினி, கமல் உள்பட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் இந்த விழாவின்போது விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் டிரைலர் மற்றும் அவர் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தின் டீசர் ஆகிய இரண்டும் வெளியாகவுள்ளதாம் இந்த நிலையில் இது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலைவிழாவா? அல்லது விஷாலின் திரைப்பட கலைவிழாவா? என்று முனங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு படங்களின் புரமோஷன் தவிர வேறு படங்களின் புரமோஷன் இந்த விழாவின் இடையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நாயகியாக விஷால் காதலி

தனுஷ் நாயகியாக விஷால் காதலி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் நடிகர் சரத்குமாரின் மகளும், விஷாலின் காதலி என்று சொல்லப்படுபவருமான வரலட்சுமி, தனுஷின் அடுத்த படமான 'மாரி 2' படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'மாரி' படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவரே நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென இன்று வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வரலட்சுமியின் வரவால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதேபோல் இந்த படத்தில் எதிர்பார்க்கப்பட்ட இன்னொரு நபர் இசையமைப்பாளர் அனிருத். ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே
ஆர்.கே.நகரில் என் வேட்புமனு ரிஜக்ட் ஆக வேண்டியவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

ஆர்.கே.நகரில் என் வேட்புமனு ரிஜக்ட் ஆக வேண்டியவர்களில் இவரும் ஒருவர்: விஷால்

சற்றுமுன், செய்திகள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த 'இரும்புத்திரை' டிரைலர் வெளியிட்டு விழாவில் இதுகுறித்து நகைச்சுவை கருத்தை விஷால் தெரிவித்தார் நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது பலர் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் இயக்குனர் மித்ரன். நான் ஆர்.கே.நகரில் போட்டியிட்டிருந்தால் 'இரும்புத்திரை' திரைப்படம் இன்னும் காலதாமதம் ஆகியிருக்கும். எனவேதான் மித்ரன் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று சாமியை கும்பிட்டார். அவருடைய வேண்டுதல் பலித்துவிட்டது. என்னைப் பற்றி பல்வேறு கருத்துகள், அவதூறுகள் வரலாம். ஆனால், நான் கண்ணாடியைப் பார்க்கும்போது என்னை நான் குற்றமற்றவனாக பார்க்க வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் நடக்கிறேன். கண்ணாடிதான் என் நண்பன். என்று விஷால் பேசினார்.
இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவின் புகைப்படங்களை பார்ப்போம்