குறிச்சொல்: ஸ்டாலின்

ராஜாவுக்கெல்லாம் பதில் சொல்லி எனர்ஜி வேஸ்ட் செய்யாதீங்க: கமல் வேண்டுகோள்

ராஜாவுக்கெல்லாம் பதில் சொல்லி எனர்ஜி வேஸ்ட் செய்யாதீங்க: கமல் வேண்டுகோள்

சற்றுமுன், செய்திகள்
பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பெரியார் சிலை குறித்து பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே கொந்தளிக்க செய்துவிட்டது. பாஜகவின் மேலிட அழுத்தம் காரணமாக அவர் அந்த பதிவை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜாவின் பெரியார் சிலை உடைப்பு குறித்த பதிவுக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு கமலின் இந்த டுவீட்டில் எல்லா சிலையும் என்றால் சாமி சிலையும் சேர்த்தா? என்று ஒருசிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதற்கு கமல் விரைவில் விளக்கம் அளிபபார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நக்மாவின் அதிரடி குஷ்புவை ஓரங்கட்டவா? காங்கிரஸில் புதிய புயல்

நக்மாவின் அதிரடி குஷ்புவை ஓரங்கட்டவா? காங்கிரஸில் புதிய புயல்

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில நாட்களாகவே நடிகையும் மகிளா காங்கிரஸ் செயலாளருமான நக்மா, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். நேற்று முன் தினம் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த நிலையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை செய்தார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், தமிழக அரசியலில் பரபரப்பாக இயங்கி வரும் குஷ்புவை ஓரங்கட்டவே நக்மா நடவடிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை குஷ்பு குறுகிய காலத்தில் காங்கிரஸில் செல்வாக்கு பெற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டார். அரசியலில் அவருடைய முன்னேற்றத்தை கண்டு பொறுக்க முடியாத ஒரு சில காங்கிரஸ் தலைவர் நக்மாவை, குஷ்புவுக்கு எதிராக களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதுவரை ஈவிகேஎஸ், இளங்கோவன் ஆகியோர்கள் மட்டுமே பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இனிவரும் காலங்களில் குஷ்பு, நக்மாவின் ஈகோ பிரச்சனை ஊடக