குறிச்சொல்: aala poran tamilan

ஆளப்போறான் தமிழன்! மெர்சல் புதிய போஸ்டரால் பரபரப்பு

ஆளப்போறான் தமிழன்! மெர்சல் புதிய போஸ்டரால் பரபரப்பு

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டர் சில நிமிடங்களுக்கு வெளியாகியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த போஸ்டரில் 'ஆளப்போறான்' தமிழன் என்று தொடங்கும் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 10ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உள்ளதாக ஆயிரக்கணக்கான டுவீட்டுக்கள் பதிவாகி உள்ளதில் இருந்து தெரிய வருகிறது. மேலும் 'ஆளப்போறான்' தமிழன் என்ற வரியுடன் பாடல் தொடங்குவதால் விஜய்யின் அரசியல் களம் விரைவில் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு போஸ்டரே சமூக வலைத்தளத்தை சுனாமி போல் சுழன்றடிக்க செய்தால் இந்த படம் வெளியாகும் தினத்தில் என்ன நடக்கும் என்பதை கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை