குறிச்சொல்: aarthy

பிக்பாஸ் வீட்டில் ஜூலி-ஆர்த்தி. இனிமேல் என்ன ஆகும்?

பிக்பாஸ் வீட்டில் ஜூலி-ஆர்த்தி. இனிமேல் என்ன ஆகும்?

சற்றுமுன், செய்திகள்
சற்று முன் வெளியாகிய விஜய் டிவியின் புரமோ வீடியோ மூலம் பிக்பாஸ் வீட்டில் ஜூலி மற்றும் ஆர்த்தி நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிரித்த முகத்துடன் ஜூலியும், ஆர்த்தியும் நுழைந்தாலும் பழைய பங்கேற்பாளர்கள் மீண்டும் நுழைவதை ஏற்கனவே இருப்பவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டு இருவரையும் மற்ற பங்கேற்பாளர்கள் வரவேற்றாலும் அவர்கள் மனதின் நெருடன் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதே நேரத்தில் ஜூலி, ஆர்த்தி வருகை பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஓவியா போல் நாடகமாடும் சுஜா, காயத்ரிக்கு மாற்றாக இருக்கும் காஜல் ஆகியோர்களுடன் ஜூலியும் இணைவதால் வீட்டில் பிரச்சனைகளுக்கு பஞ்சமிருக்காது என்றே கருதப்படுகிறது.
காயத்ரியும் ஆர்த்தியும் ஜூலியை வின்னராக்கி விடுவார்கள். பிரபல நடிகர்

காயத்ரியும் ஆர்த்தியும் ஜூலியை வின்னராக்கி விடுவார்கள். பிரபல நடிகர்

சற்றுமுன், செய்திகள்
விஜய் டிவியில் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் ரியாலிட்டி ஷோ என்றே கருதுவதில்லை. ஒரு சிறந்த இயக்குனரின் மேற்பார்வையில் பங்கேற்பாளர்கள் அனைவரும் நடித்து வருவது போன்றே உள்ளது. குறிப்பாக நேற்று காயத்ரியும், ஆர்த்தியும் மாறி மாறி ஜூலியை வெறுப்பேற்றியது கொஞ்சம் கூட நம்பமுடியாத வகையில் சினிமாத்தனமாக உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் இந்த நாடகத்தை சுவாரஸ்யத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆர்த்தி மற்றும் காயத்ரியின் சேட்டைகளை பார்த்த பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் காயத்ரியும் ஆர்த்தியும் டார்ச்சர் செய்தே ஜூலியை இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாற்றிவிடுவார்கள் போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.