குறிச்சொல்: accident

வாழ்வைத் திருப்பிய நொடிகள்; விபத்துக்கு பின் கவுதம் மேனனின் டுவீட்

வாழ்வைத் திருப்பிய நொடிகள்; விபத்துக்கு பின் கவுதம் மேனனின் டுவீட்

சற்றுமுன், செய்திகள்
இன்று காலை சென்னை அருகே பிரபல இயக்குனர் கவுதம்மேனன் சென்ற கார் டிம்பர் லாரி ஒன்றின்மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் கவுதம் மேனன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுதம் மேனன் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து ஒரு டுவீட்டை தமிழில் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியதாவது: என் நலன் விரும்பிய , நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன். https://twitter.com/menongautham/status/938815017658355716
நாசர் மகனுக்கு ஆறுதல் சொன்ன இளையதளபதி

நாசர் மகனுக்கு ஆறுதல் சொன்ன இளையதளபதி

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி மிகச்சிறந்த மனிதர் மட்டுமின்றி சிறந்த மனிதாபிமானம் மிக்கவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் வீட்டிற்கு விஜய் நேற்று திடீரென சென்றார் கடந்த 2014ஆம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் சிக்கி குணமாகி வரும் நாசரின் மகன் ஃபைசலை சந்தித்த விஜய், அவரிடம் உடல்நலன் விசாரித்ததோடு அவருடன் இணைந்து செல்பி எடுத்து கொண்டார் இதுகுறித்து நாசர் கூறியபோது, 'எனது மகன் விஜய்யின் தீவிர ரசிகர். இதனையறிந்த விஜய் என்னுடைய வீட்டிற்கு வந்ததோடு அவருடன் செல்பியும் எடுத்து கொண்டது எனக்கு பெருமையாக உள்ளது' என்று கூறியுள்ளார் மேலும் விஜய்யும் நாசரும் இணைந்து ‘தமிழன்’, ‘வசீகரா’, ‘சுக்ரன்’, ’ஆதி’, ‘தலைவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் மும்பை தாராவி போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட் பணி முடிவடைந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று செட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் போது ஏணி ஒன்றை ஊழியர் ஒருவர் தூக்கி கொண்டு வந்தார். அப்போது அவர் நடந்து வந்த பாதையில் இருந்த மின்வயரை மிதித்தார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் படக்குழுவினர்களும் செட் அமைக்கும் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பலியான ஊழியர் பெயர் மைக்கேல் என்பதும் அவருடைய மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘தெய்வமகள்’ சீரியல் நடிகை விபத்தில் பலியா?

‘தெய்வமகள்’ சீரியல் நடிகை விபத்தில் பலியா?

சற்றுமுன், சின்னத்திரை
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'தெய்வமகள்' சீரியலில் நடித்து வரும் நடிகை ரேகா சென்னை-பெங்களூர் சாலையில் விபத்தில் பலியானதாக வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் விபத்தில் பலியானது 'தெய்வமகள்' ரேகா இல்லை என்றும், கன்னட தொலைக்காட்சி நடிகையும் சென்னை அமிர்தா விளம்பரத்தில் நடித்தவருமான ரேகாசிந்து என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞாலையில் இன்று காலை நடிகை ரேகாசிந்து மற்றும் மூவர் காரில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நடிகை ரேகா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் காயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த கார் டிரைவர் தலைமறைவாகியுள்ளார். சென்னை அமிர்தா உள்பட பல விளம்பர படங்களிலும், கன்னட