குறிச்சொல்: Actor simbu

சிம்புவின் புதிய தோற்றம் – மணிரத்னம் படத்திற்கா?

சிம்புவின் புதிய தோற்றம் – மணிரத்னம் படத்திற்கா?

சற்றுமுன், செய்திகள்
நடிகர் சிம்புவின் புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத் தோல்விக்கு பின் நடிகர் சிம்பு பொது இடங்களில் தலை காட்டுவதில்லை. டிவிட்டர் பக்கத்தில் இருந்தும் வெளியேறினார். அந்நிலையில், அவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்க இருக்கிறார் எனவும் கூறப்பட்டது. மேலும், இயக்குனர் மணிரத்னம் படத்திலும் அவர் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், தற்போது சிம்பு தனது ஹேர் ஸ்டலை மாற்றியிருக்கிறார். மொஹாக் ஹேர்கட் என அழைக்கப்படும் அந்த தோற்றத்தில் அவர் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறார். மணிரத்னம் படத்தில்தான் அவர் இந்த தோற்றத்தில் நடிக்கிறாரா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. ஆனால், இது அவர் நடிக்கவுள்ள ஆங்கில படத்தில்தான் அவர் இந்த தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
ஓவியாவை திருமணம் செய்வதாக வெளியான செய்தி – சிம்பு விளக்கம்

ஓவியாவை திருமணம் செய்வதாக வெளியான செய்தி – சிம்பு விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியாவை, நடிகர் சிம்பு, தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியானது. அதுவும் அவரின் பெயரில் இருந்த கணக்கிலிருந்தே இந்த செய்தி வெளியானது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால், முற்றிலும் தவறானது என சிம்பு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு அவர் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ''எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக  அக்கௌன்ட் மூலம்  இது